பஞ்சு, நூல் விலை சீராகும் வரை 'ஸ்டிரைக்'; நூற்பாலை உரிமையாளர்கள் முடிவு 

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என, தென்னிந்திய நுாற்பாலை உரிமையாளர்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நுாற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரியில் 356 கிலோ உடைய ஒரு கேண்டி பஞ்சு விலை, 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது.தற்போது, 1.15 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என, தென்னிந்திய நுாற்பாலை உரிமையாளர்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நுாற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரியில் 356 கிலோ உடைய ஒரு கேண்டி பஞ்சு விலை, 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது.



latest tamil news



தற்போது, 1.15 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், கிலோ 328 ரூபாயாக இருந்த நுாலின் விலை தற்போது 399 ஆக அதிகரித்துள்ளது.அபரிமித பஞ்சு விலை உயர்வுக்கு, நாட்டில் குறைந்த பருத்தி விளைச்சலே காரணம். பருத்தி சீசன் துவங்கியதும், பெரிய பஞ்சு வியாபாரிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடன்பாடு எட்டப்பட்டு, அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து, வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொண்டனர்.

மேலும், அதிக அளவு பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், பஞ்சு விலை கடுமையாக உயர்ந்தது. தமிழகத்திலுள்ள நுாற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்வதில் மூலதன பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக புலம்பும் நுாற்பாலை உரிமையாளர்கள், நுாற்பாலைகளை இயக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கோவையிலுள்ள தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சங்கத் தலைவர் செல்வன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என, முடிவு செய்துள்ளனர்.சங்கத்தலைவர் செல்வன் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு கேண்டி 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. நிலைமை கை மீறி போய்விட்டது. இச்சூழலில் பஞ்சை கொள்முதல் செய்து, நாங்கள் நுாலை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது.

மிகவும் சிரமம் என்பதால் தான், பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை இந்த நிமிடம் முதல் நுாற்பாலைகளை இயக்குவதில்லை என்றும், பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளோம். இதனால் பல லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வருவாய் இழப்புடன், அன்னிய செலாவணியிலும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இன்று முதல் 'ஸ்டிரைக்'

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நுால் கொடுத்து, அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை, 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
22-மே-202210:45:38 IST Report Abuse
Kumar பஞ்சு விலை குறைவாக இருக்கும்போது நீங்கள் பஞ்சு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள். விலை உயர்வுக்கு காரணம் என்ன? பஞ்சைப் பதுக்கிவைப்பது யார் ? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-மே-202209:23:07 IST Report Abuse
duruvasar ஸ்டாலின் இறக்குமதி செய்து ஆலைகளுக்கு திராவிடியன் மாடலில் இலவசமாக தரலாமே.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-மே-202206:40:20 IST Report Abuse
Kasimani Baskaran தாமிரம் சீனாவசம் சென்றுவிட்டது... அடுத்து ஜவுளியும் சீனாவிடமோ அல்லது பங்காளதேசத்துக்கோ சென்று விடும்...வெங்காய அரசால் பதுக்கல்க்காரர்களை கண்டுபிடித்து நொங்கெடுக்க முடியாதா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X