வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாமல்லபுரம்: சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி நடக்கஉள்ள மாமல்லபுரம், புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளுக்கு ஒப்பந்தம் பெற, ஒப்பந்ததாரர்கள் படையெடுக்கின்றனர்.

சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரவேற்பு, போக்குவரத்து, பிற ஏற்பாடுகளுக்காக, பல்துறை அதிகாரிகளுடன் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி வளாகத்தில், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, தற்காலிக அலுவலகம், 25 ஊழியர்களுடன் இயங்குகிறது. இங்குள்ள ஷெராட்டன் நிறுவனத்தின், போர் பாயின்ட்ஸ் விடுதியில், போட்டிகள் நடக்கின்றன. இங்கு, 70 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கம் உள்ளது.
கூடுதலாக, 50 ஆயிரம் சதுர அடி பரப்பில், ஜெர்மானிய வகை தற்காலிக அரங்கம் அமைக்கப்பட உள்ளது.செஸ் அரங்குகளில், இரவை பகலாக்கும் பிரகாச ஒளிவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. பிரமாண்டமான வாகன நிறுத்தப்பகுதி அமைக்கப்படுகிறது. தடையற்ற மொபைல் போன் மற்றும் இணையதள இணைப்பு கிடைக்க, தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.போட்டிகளில், 186 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள், மாமல்லபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர்.அவரவர் தங்கும் விடுதியில் இருந்து, மாமல்லபுரம் அரங்குக்கு வரும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளது.மாமல்லபுரம், பிரதான, சிற்ப பகுதி சாலைகள், தெருவிளக்குகள் உள்ளிட்டவை புதுபொலிவுடன் மேம்படுத்தப்பட உள்ளன. சீன அதிபர் ஜிங்பிங் வருகைக்கு பின், தற்போது மாமல்லபுரம் மீண்டும் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படுகிறது.

சர்வதேச செஸ் போட்டி ஏற்பாடுகளுக்காக, 92 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேம்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற, பல்வேறு பகுதிகளின் அரசு திட்டப் பணி ஒப்பந்ததாரர்கள், தற்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு படையெடுக்கின்றனர். நிர்வாகத்தினர், ஒப்பந்தம் அளிக்க, 'வழக்கமான' நடைமுறை விவரங்களை விளக்கி வருகின்றனர்.
புது பேருந்து நிலையம்
மாமல்லபுரத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பில், வணிக வளாகம், உணவகம், பயணியர் விடுதி, பயணியர் வாகன நிறுத்துமிடம், புல்வெளி போன்ற வசதிகளுடன், நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.மாமல்லபுரத்தில் நிரந்தர பேருந்து நிலையம் இல்லை. ஸ்தல சயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதி, பேருந்து நிலையமாக தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு, நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க, 30 ஆண்டுகளுக்கு முன் அரசு முடிவெடுத்தது. கருக்காத்தம்மன் கோவில் அருகில், 6.80 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனாலும், பல இடையூறுகளால் திட்டம் முடங்கியது. தற்போது, அதே இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்த உள்ளது.சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோருடன், பேருந்து நிலையம் அமைவிட பகுதியை, நேற்று ஆய்வு செய்தார். இரண்டு மாதங்களில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.ரூ.60 கோடியில் பேருந்து நிலையம்
மாமல்லபுரத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பில், வணிக வளாகம், உணவகம், பயணியர் விடுதி, பயணியர் வாகன நிறுத்துமிடம், புல்வெளி போன்ற வசதிகளுடன், நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.மாமல்லபுரத்தில் நிரந்தர பேருந்து நிலையம் இல்லை. ஸ்தல சயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதி, பேருந்து நிலையமாக தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு, நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க, 30 ஆண்டுகளுக்கு முன் அரசு முடிவெடுத்தது. கருக்காத்தம்மன் கோவில் அருகில், 6.80 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும், பல இடையூறுகளால் திட்டம் முடங்கியது.
தற்போது, அதே இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்த உள்ளது. சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோருடன், பேருந்து நிலையம் அமைவிட பகுதியை, நேற்று ஆய்வு செய்தார். இரண்டு மாதங்களில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE