ரெக்கை கட்டி பறக்கிறது விலை1 கிலோ தக்காளி 110 ரூபாய்

Added : மே 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோயம்பேடில் 1 கிலோ தக்காளி, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை இன்னும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் கூறியுள்ளனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, காய்கறி வரத்து உள்ளது. தினமும், 90 வாகனங்களில், 1,200 டன் தக்காளிகள் வரும். நேற்று குறைவான அளவில், 38 வாகனங்களில், 500 டன் தக்காளி மட்டுமே வந்தது. வரத்து
ரெக்கை கட்டி பறக்கிறது விலை1 கிலோ தக்காளி 110 ரூபாய்

கோயம்பேடில் 1 கிலோ தக்காளி, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை இன்னும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, காய்கறி வரத்து உள்ளது. தினமும், 90 வாகனங்களில், 1,200 டன் தக்காளிகள் வரும். நேற்று குறைவான அளவில், 38 வாகனங்களில், 500 டன் தக்காளி மட்டுமே வந்தது. வரத்து குறைந்து, தேவை அதிகரிப்பால், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று காலை, கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கும், நவீன் தக்காளி கிலோ 110 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.சில்லரை கடைகளில், நவீன் தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறும்போது, 'மழை, வரத்து குறைவு போன்றவற்றால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு விலை உயர்வு நீடிக்கலாம்' என்றார்.இந்நிலையில், 'விலை உயர்வை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதன்படி, சென்னையில் டி.யு.சி.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் உட்பட நான்கு கூட்டுறவு சங்கங்கள், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட, 36 இடங்களில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் நடத்தி வருகின்றன.அந்த கடைகளில் நேற்று கிலோ தக்காளி, 79 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து, 3,100 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. அவை சற்று நேரத்திலேயே முழுதும் விற்று தீர்ந்தன.

- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-மே-202219:05:21 IST Report Abuse
jayvee ஒரு RSB ஊடகங்கள் கூட இதை பற்றி வாயே திறக்கவில்லை
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
22-மே-202210:10:02 IST Report Abuse
Nagar ஒவ்வொருவரும் தனது வீட்டின் சமையல் அறையிலோ அல்லது பால்கனியிலோ, கூரையிலோ, காம்பௌண்டிலோ தக்காளி மற்றும் எல்லா காய்கறிகளும் வளர்க்க முடியும். விலைகூடுவதற்கு அரசாங்கத்தை குறை கூறுவதை விட்டு ஒவ்வொருவரும் வீட்டிலேயே காய்கறிகள் வளர்க்க முயற்சி செய்யுங்கள். ஆறு மாத முயற்சியில் நீங்கள் நிபுணர் ஆகி வீட்டுக்கு வேண்டிய எல்லா காய்கறிகளையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
22-மே-202209:21:57 IST Report Abuse
Dhandapani .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X