சென்னை : திருவள்ளூரில் உள்ள அலமாதி உட்பட நான்கு துணை மின் நிலையங்களில், 200 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறன் உள்ள நவீன 'பவர் டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின்னழுத்த பிரச்னை
மாநிலம் முழுதும் மின் தேவை அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும் மின்னழுத்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, கூடுதலாக துணை மின் நிலையங்களும், மின் வழித்தடங்களும் அமைக்கப்பட வேண்டும்.ஆனால், துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. ஒரு 400 கி.வோ., திறன் துணை மின் நிலையத்தில் சராசரியாக, 1,000 மெகா வாட் மின்சாரம் கையாளப்படுகிறது.
650 மெகா வாட் மின்சாரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அலமாதி; சேலம் - கே.ஆர்.தோப்பூர்; திருநெல்வேலி - கானார்பட்டி; துாத்துக்குடி - கயத்தாறு ஆகிய இடங்களில், 400 கி.வோ., திறனில் துணை மின் நிலையங்கள் உள்ளன.அந்த துணை மின் நிலையங்களில் தலா, 200 எம்.வி.ஏ., திறனில், நவீன பவர் டிரான்ஸ்பார்மர்களை, மின் வாரியம் அமைக்க உள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் கூடுதலாக, 160 மெகா வாட் என, மொத்தம் 640 முதல் 650 மெகா வாட் மின்சாரம் வரை கூடுதலாக கையாள முடியும். இதற்காக, 40 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE