கைப்பையிலும் சைவம் வந்தாச்சு...

Added : மே 22, 2022 | |
Advertisement
சாதாரணமாக பெண்களின் லெதர் கைப்பை, அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் பைகள், லேப்டாப் பை ஆகியன பிராணிகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பிராணிகளின் வதைகளை தடுக்க தற்போது இதுபோன்ற பைகளை ஏன் செயற்கை தோலில் (வேகன் லெதர்) தயாரிக்க கூடாது என்ற எண்ணம் தற்போது பரவலாக இருக்கிறது.வேகன் லெதர் என்பது பெரும்பாலும் பாலிவினைல் குளோரைடு(PVC) மற்றும் பாலியூரிதீன் என்ற பாலிமரில்



சாதாரணமாக பெண்களின் லெதர் கைப்பை, அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் பைகள், லேப்டாப் பை ஆகியன பிராணிகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பிராணிகளின் வதைகளை தடுக்க தற்போது இதுபோன்ற பைகளை ஏன் செயற்கை தோலில் (வேகன் லெதர்) தயாரிக்க கூடாது என்ற எண்ணம் தற்போது பரவலாக இருக்கிறது.

வேகன் லெதர் என்பது பெரும்பாலும் பாலிவினைல் குளோரைடு(PVC) மற்றும் பாலியூரிதீன் என்ற பாலிமரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்தவொரு வடிவமைப்பாளரின் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் பைகள் தயாரிக்க உதவும் ஒரு பாலிமர் ஆகும்.



'சைவத் தோல்'


அன்னாசி இலைகள், கார்க், ஆப்பிள் தோல்கள், கற்றாழை, பிற பழ கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் போன்ற புதுமையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை உலகத்துக்கு நல்லது; விலங்குகளுக்கும் நல்லது.பெரிய ஜாக்கெட் முதல் சரியான சிறிய கறுப்பு உடை வரை- இதில் உருவாக்க முடியும். இதுதவிர தோல் காலணி, பூட்ஸ், கைப்பைகள், பெல்ட், வாலட் மற்றும் வீடு, கார் இருக்கை கவர்கள் ஆகியவற்றையும் பலர் தயாரிக்கின்றனர். சிறிது அதிகமாக செலவழிக்க நினைத்தால், உங்களுடைய விலை உயர்ந்த கார்களுக்கு செயற்கை தோல் இருக்கைகளை போட்டு அழகு பார்க்கலாம். செயற்கை தோல் உங்களை அழகாக்குவது மட்டுமல்லாமல், அது கொடுமையற்றது என்பதால் அது நம் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது.ஒரு பில்லியனுக்கும் அதிகமான பசுக்கள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், முதலைகள், தீக்கோழிகள், கங்காருக்கள், நாய்கள் மற்றும் பூனைகள் கூட ஒவ்வொரு ஆண்டும் தோலுக்காக கொலை செய்யப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, செயற்கைத் தோல் எந்த கொலையும் இல்லாமல் உங்களுக்கு உபயோகமான பொருட்களுக்கு அதே அழகை அளிக்கிறது என்பது தான் முக்கியமானது.செயற்கை தோல் பிளாஸ்டிக் பூச்சுடன் தயாரிக்கப்படுவதால், அது ஏற்கனவே நீர்ப்புகாத வண்ணம் உள்ளது. இவற்றை லேசான சோப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இந்த வகை செயற்கை தோல்களை 'சைவத் தோல்' என்றும் அழைக்கிறார்கள்.



'ஜுக்'




என்ன செய்கிறது?


பிராணிகள் வதைகளை தடுப்பதை மட்டுமே ஒரு எண்ணமாக கொண்ட 'ஜுக்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், செயற்கை தோலில் இருந்து 'லேப்டாப் பேக், ஷோல்டர் பேக்' மற்றும் பெண்களின் கைப்பைகள், மணிபர்ஸ், அலுவலகத்துக்கு எடுத்து செல்லும் பைகள் ஆகியவற்றை தயாரிக்கிறது.மேலும், இவர்களின் தயாரிப்புகளின் மீது இந்தியாவின் கலைகளை பிரதிபலிக்கக்கூடிய டிசைன்களை அச்சிடுகின்றனர். இது அழகுக்கு அழகு கூட்டுகிறது. இவர்கள் தங்கள் தயாரிப்புகளை, நேரடியாக ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்கின்றனர். இணையதளம்: www.zouk.co.in. சந்தேகங்களுக்கு: இ - மெயில்: sethuraman.sathappan@gmail.com, இணையதளம்:sethuraman.sathappan@gmail.com. மொபைல் போன் எண்: 98204 51259.- சேதுராமன் சாத்தப்பன் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X