'கொலை, கொள்ளை, தற்கொலை' பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Added : மே 22, 2022 | |
Advertisement
சென்னை : 'தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் சென்ற தமிழகத்தை, 'கொலை, கொள்ளை, தற்கொலை' என்ற பாதைக்கு, தி.மு.க., அரசு அழைத்து செல்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தமிழகம் அமளிக்காடாக மாறி விடுகிறது. சென்னை


சென்னை : 'தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் சென்ற தமிழகத்தை, 'கொலை, கொள்ளை, தற்கொலை' என்ற பாதைக்கு, தி.மு.க., அரசு அழைத்து செல்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தமிழகம் அமளிக்காடாக மாறி விடுகிறது.

சென்னை ஆர்.கே.நகரில் போதை மாத்திரை விவகாரத்தில், இளைஞர் ராகுல் படுகொலை; பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் என்ற தொழிலாளி அடித்துக் கொலை.தென்காசியை சேர்ந்த நெல் வியாபாரி, அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தியில் அடித்துக் கொலை என படுகொலைகள், தினமும் நடந்து வருகின்றன.இது மட்டுமின்றி, ஜாதி மோதல்களும் அதிகரித்து வருகின்றன. தி.மு.க.,வினரின் அராஜகம் காரணமாக, காவல் துறையினரும், அரசு ஊழியர்களும், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இதன் காரணமாக, தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.மேலும், பாலியல் தொல்லைகள், கொள்ளை சம்பவங்கள், அன்றாடம் நடந்து வருகின்றன. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, தமிழகத்தில் நிலவுகிறது. இது நீடித்தால், சட்டம் ஒழுங்கு என்பதே இல்லாமல் போய் விடும்.எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X