சென்னை : பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றி, தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லும்படி, தமிழக பா.ஜ.,வினருக்கு, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு, நேற்று மாலை வந்தார். மாநில, மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, அமைச்சர் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி, எட்டு ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழை மக்கள், விவசாயிகள், பெண்கள் என, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதனால், நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.எனவே, மத்திய அரசின் திட்டங்களை, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் பா.ஜ.,வினர் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார்.
பா.ஜ.,வை வளர்க்க, கட்சியினர் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.பின், பிரஹலாத் படேல் அளித்த பேட்டி:மத்திய அரசு, நாடு முழுதும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு, மத்தியஅரசு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு, 611 கோடி ரூபாய் தான் செலவு செய்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில அரசுகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் நேற்று மாலை, கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE