செய்யூர்:செய்யூர் அருகே, வெடால் கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த அளவு 450 ஏக்கர். இதில் 300 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், 150 ஏக்கர் ஏரியின் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது.
ஏரியின் புறம்போக்கு நிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி நிலங்களை, அப்பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாக மாற்றி வைத்திருந்தனர்.இதையறிந்த மாவட்ட நிர்வாகம், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த, வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய் துறையினர், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 100 ஏக்கர் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நேற்று மீட்டனர்.மேலும், 'இந்த நிலத்தை ஆக்கிரமிக்கவோ, விற்கவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகையையும் அந்த இடத்தில் நட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE