அமெரிக்கா செல்ல போலி ஆவணம் ; தெலுங்கானா நபர் கைது| Dinamalar

அமெரிக்கா செல்ல போலி ஆவணம் ; தெலுங்கானா நபர் கைது

Added : மே 22, 2022 | |
சென்னை அமெரிக்கா செல்வதற்காக, அந்நாட்டு துாதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, தெலுங்கானாவை சேர்ந்த வாலிபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அந்நாட்டில் சென்று படிப்பதற்காக, தெலுங்கானாவை சேர்ந்த கர்ணம் சாய் திலீப் விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. அதை தொடர்ந்து,


சென்னை அமெரிக்கா செல்வதற்காக, அந்நாட்டு துாதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, தெலுங்கானாவை சேர்ந்த வாலிபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில், அந்நாட்டில் சென்று படிப்பதற்காக, தெலுங்கானாவை சேர்ந்த கர்ணம் சாய் திலீப் விண்ணப்பித்திருந்தார்.

அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. அதை தொடர்ந்து, அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இதையடுத்து, போலீஸ் விசாரணையில் ஆவணங்கள் போலி என்பது உறுதியானது. தெலுங்கானா, விகாராபாத் பகுதியை சேர்ந்த கர்ணம் சாய் திலீப், 25, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X