வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரசையும், பா.ஜ.,வையும் தோற்கடித்து, தன் கட்சியை ஆட்சியில் அமர வைத்துள்ளார்.
![]()
|
இதையடுத்து, தன் கட்சியை மற்ற மாநிலங்களிலும் வளர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார். நாடு முழுதும் தன் கட்சி பா.ஜ.,விற்கு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். இந்நிலையில், இந்த வருட இறுதியில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆம் ஆத்மியை களமிறக்க கெஜ்ரிவால் அனைத்து முயற்சி களையும் செய்து வருகிறார். படேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேல் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவர் ஆம் ஆத்மியில் சேருவார் எனக் கூறப்படுகிறது.
குஜராத்தில் பா.ஜ.,விற்கு அடுத்தப்படியாக தன் கட்சி வர வேண்டும்; இங்கு காங்கிரசை ஓரங்கட்ட வேண்டும் என கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளாராம். இதே போல கேரளாவிலும் மாநில கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்.கெஜ்ரிவால் விரைவில் தமிழகம் வர உள்ளார். இங்கும் அவர் தீவிர அரசியல் செய்ய விரும்புகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் கூட்டணி அமைக்க அவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார். தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புள்ளது என்கின்றனர்,
![]()
|
ஆம் ஆத்மி கட்சியினர்.சமீபத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் டில்லி வந்த போது கெஜ்ரிவாலை சந்தித்தார். அங்கு அவரது அரசு நடத்தும் பள்ளிகளையும் சென்று பார்த்தார். அப்படியிருக்கையில், கெஜ்ரிவால் எப்படி தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் செய்ய முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் 'தமிழக அரசியலில் காலுான்ற வேண்டுமானால், ஆளும் தி.மு.க.,விற்கு எதிராகத் தான் செயல்பட வேண்டும்' என்கின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.கமல் கட்சியோடு, பா.ம.க.,வையும் தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என, கெஜ்ரிவால் யோசித்து வருகிறாராம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement