ஆரம்பமாகுது அடுத்த சர்ச்சை; 6 பேர் விடுதலைக்கு ஆலோசனை

Added : மே 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊட்டி, : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற ஆறு பேரின் விடுதலை தொடர்பாக, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே, சர்ச்சையாகிப் போன இவ்விஷயத்தை மேலும் சர்ச்சையாக்கும் விதமாக, முதல்வர் பேசியிருப்பது, காங்கிரசை முகம் சுளிக்க வைத்து உள்ளது.முன்னாள் பிரதமர்ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த
ஆரம்பமாகுது அடுத்த சர்ச்சை;   6 பேர் விடுதலைக்கு ஆலோசனை


ஊட்டி, : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற ஆறு பேரின் விடுதலை தொடர்பாக, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே, சர்ச்சையாகிப் போன இவ்விஷயத்தை மேலும் சர்ச்சையாக்கும் விதமாக, முதல்வர் பேசியிருப்பது, காங்கிரசை முகம் சுளிக்க வைத்து உள்ளது.முன்னாள் பிரதமர்ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துஉத்தரவிட்டது.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டியில் தங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகம் விருந்தினர் மாளிகையில், காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுனர்களுடன், ஆறு பேர் விடுதலை தொடர்பாக நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி எம்.பி., ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பேரறிவாளனை முதல்வர் கட்டித் தழுவிக் கொண்டாடியதை, மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், மீதி குற்றவாளிகள் ஆறு பேரின் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசியிருப்பது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜிவ் நினைவு தினமான நேற்று, இந்த ஆலோசனையை முதல்வர் நடத்தியது, காங்கிரசாரை மேலும் கொதிப்பில் ஆழ்த்திஉள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-202220:42:11 IST Report Abuse
சி சொர்ணரதி அப்படியே தமிழக ஜெயிலில் உள்ள தமிழர்களை எல்லாரையும் விட்டுவிட வேண்டியது தானே.ஜெயிலில் இருக்கின்றவர்களின் குடும்பங்கள் என்னவாகும் அவர்களால் இறந்தவர்களையும் அவர்களின் குடும்பத்தை எல்லாம் யோசிக்கக் கூடாது.திருட்டு மாடல் சாரி திராவிட மாடல் அப்படித்தான் இருக்கும்.... ராஜிவ்காந்தியோடு ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் யாராவது இறந்திருந்தால் அந்த கஷ்டம் தெரியும்.அப்பாவி மக்கள் இறந்தனர்.அவர்களை பற்றி ஸ்டாலின் க்கு என்ன கவலை.அதனால் பெரிய சாதனை செய்த பேரறிவாளன் கட்டிப்புடிப்பார்.திருடனுக்கு திருடன் கூட்டு சேருகிறார்கள்.வேற என்ன சொல்ல????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X