ஆரம்பமாகுது அடுத்த சர்ச்சை; 6 பேர் விடுதலைக்கு ஆலோசனை| Dinamalar

ஆரம்பமாகுது அடுத்த சர்ச்சை; 6 பேர் விடுதலைக்கு ஆலோசனை

Added : மே 22, 2022 | கருத்துகள் (1) | |
ஊட்டி, : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற ஆறு பேரின் விடுதலை தொடர்பாக, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே, சர்ச்சையாகிப் போன இவ்விஷயத்தை மேலும் சர்ச்சையாக்கும் விதமாக, முதல்வர் பேசியிருப்பது, காங்கிரசை முகம் சுளிக்க வைத்து உள்ளது.முன்னாள் பிரதமர்ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த
ஆரம்பமாகுது அடுத்த சர்ச்சை;   6 பேர் விடுதலைக்கு ஆலோசனை


ஊட்டி, : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற ஆறு பேரின் விடுதலை தொடர்பாக, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஏற்கனவே, சர்ச்சையாகிப் போன இவ்விஷயத்தை மேலும் சர்ச்சையாக்கும் விதமாக, முதல்வர் பேசியிருப்பது, காங்கிரசை முகம் சுளிக்க வைத்து உள்ளது.முன்னாள் பிரதமர்ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துஉத்தரவிட்டது.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டியில் தங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகம் விருந்தினர் மாளிகையில், காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுனர்களுடன், ஆறு பேர் விடுதலை தொடர்பாக நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி எம்.பி., ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பேரறிவாளனை முதல்வர் கட்டித் தழுவிக் கொண்டாடியதை, மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், மீதி குற்றவாளிகள் ஆறு பேரின் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசியிருப்பது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜிவ் நினைவு தினமான நேற்று, இந்த ஆலோசனையை முதல்வர் நடத்தியது, காங்கிரசாரை மேலும் கொதிப்பில் ஆழ்த்திஉள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X