வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
![]()
|
இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.
![]()
|
இதை மீண்டும் லக் ஷ்மண்புரி என்ற பழைய பெயருக்கு மாற்ற யோகி முடிவெடுத்துள்ளாராம். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பா.ஜ., பெரும்பான்மையுடன் இருப்பதால் பெயர் மாற்றத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு பக்கம் ராமருக்கு அயோத்தியில் கோவில். இன்னொரு பக்கம் ராமரின் சகோதரர் லக் ஷ்மணன் பெயரில் தலைநகர் என யோகி அருமையாக அரசியல் செய்கிறார் என்கின்றனர், உள்ளூர் பா.ஜ., தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement