இது உங்கள் இடம்: போலி மிடுக்கும், பொய்யான தன்மானமும்!

Added : மே 22, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் விடுதலையையும், அவரை உச்சி முகர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாடியதையும் பார்த்து, கூட்டணி கட்சியான காங்., கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். அதிலும், குறிப்பாக கீழ்மட்டத்தில் உள்ள காங்., தலைவர்களால், பேரறிவாளன்
இது உங்கள் இடம்: போலி மிடுக்கும், பொய்யான தன்மானமும்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் விடுதலையையும், அவரை உச்சி முகர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாடியதையும் பார்த்து, கூட்டணி கட்சியான காங்., கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.


latest tamil newsஅதிலும், குறிப்பாக கீழ்மட்டத்தில் உள்ள காங்., தலைவர்களால், பேரறிவாளன் விடுதலையையும், முதல்வரின் செயலையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெட்கம், சூடு, சொரணை, மானம், சுய கவுரவம், கொள்கைப்பிடிப்பு போன்ற விஷயங்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு மேடையில் பேச வேண்டுமானால் நன்றாக இருக்கும்; அதை, நிஜ வாழ்க்கையில் கடைப்பிடிப்பது, அவர்களுக்கு நடைமுறைக்கு ஒவ்வாததாகவே இருக்கிறது.முழங்கால் தேய்ந்து, முதுகு வளைந்து, பலம் குறைந்து, கூட்டணி என்கிற ஊன்றுகோல் புண்ணியத்தில் நடமாடும் காங்கிரசார், தி.மு.க., தலைவரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், மொத்தமாக காணாமல் போய் விடுவர் என்பது தான் உண்மை.நிலைமை இப்படி இருக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்களை நொந்து என்ன புண்ணியம்? தி.மு.க.,வினர் என்ன செய்தாலும், 'ஆஹா... ஓஹோ... பேஷ்... பேஷ்...' என்று, பாராட்டினால் தான் மிச்ச காலத்தையும் ஓட்ட முடியும். என்றோ செத்துவிட்ட தலைவனுக்காக, இன்றைய காரியவாதி தலைவர்கள் தங்கள் பதவி சுகத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பது தான் நிதர்சனம். இந்த பண வெறி, பதவி வெறி பிடித்து அலையும் பச்சோந்திகளிடம் போய், கொள்கை, கத்தரிக்காய் என்று மக்கள் தேடினால், அது, வடிகட்டின முட்டாள்தனமே!சங்க காலத்தில், பெருஞ்சித்திரனார் என்ற தமிழ் புலவர் இருந்தார்; ரொம்ப கெத்தாக இருப்பார். வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும், கெத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்.ஒரு சமயம் வீட்டில் சமைக்க ஒன்றும் இல்லாததால், அவரின் மனைவி, கொல்லை புறத்தில் விளைந்திருந்த குப்பை கீரையை மட்டும் சமைத்து வைத்திருந்தார்.சாப்பிட அமர்ந்த பெருஞ்சித்திரனார், தட்டில் வெறும் கீரையை மட்டும் பார்த்ததும் கோபம் அடைந்தார். அவருக்கு அகோரப் பசி. தட்டை துாக்கி எறிந்து விட, கீரைவீட்டுச்சுவர் எங்கும் அப்பிக் கொண்டது.
சிறிது நேரம் சென்றதும், அமைதியாய் இருந்த மனைவியை பார்த்து, 'சுவரில் உள்ளதை வழித்துப் போடடி சொரணை கெட்டவளே' என்றாராம். இது எப்படி இருக்கு? அப்படித்தான் இருக்கு... நம்மகாங்கிரஸ்காரர்களின் போலி மிடுக்கும், பொய் தன்மானமும்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Balakrishnan - Chennai,இந்தியா
22-மே-202220:39:11 IST Report Abuse
M.Balakrishnan ,,,,,
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-மே-202219:58:20 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அரசியல் என்பது கபடி விளையாட்டுப் போன்றது. கபடி என்றால்,கபடம் சம்பந்தப்பட்ட விடயமா? கபடன் என்று பொருள்படுமா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-மே-202219:39:05 IST Report Abuse
r.sundaram எப்போது நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சி தருக என்று திமுக சொன்னதோ அன்றே அதன் மானம் ரோசம் சூடு சொரணை எல்லாம் ஏற்று விட்டது. பின்னே காங்கிரஸ் காரர்களுக்கு என்றுமே தன்மானம் என்பது கிடையாது, அதன் முதல் குடும்பத்தின் மனம்தான் காங்கிரஸ் கட்சியின் மானம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அப்படிதான் வளர்த்திருக்கிறார்கள். இன்று பேரறிவாளனை கட்டிப்பிடித்து உச்சிமுகந்து ஸ்டாலின் வரவேற்றத்தை காங்கிரஸ் தலைவர் கூட்டணிவேரு கட்சி கொள்கைகள்வேறு என்கிறார்கள். இவர்கள் மணத்துக்கு தரும் மரியாதை இவ்வளவுதான். கூட்டணி என்பது கொள்ளை அடிக்க என்று மட்டுமே இந்த இரு கட்சிகளும் எண்ணுகின்றன. இவர்களுக்காவது மானம் மரியாதையாவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X