இலங்கையைக் காப்பாற்றுவது எளிதான காரியமா?

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
இலங்கை, இன்று மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் பரிதாபத்துக்குரிய நிலைக்கு விழுந்த காரணம், அரசியல்வாதிகளின் ஊழலும், ராஜபக்சே குடும்ப வாரிசு ஊழல் அரசியலும், சீனாவின் ராஜதந்திர கடன் பொறியும் தான்! அந்நாட்டுடைய கலாசார தன்மை, உறவு கொண்டாடி வஞ்சிப்பது!இலங்கை, இந்தியாவின் தென்கோடியில், 54 கி.மீ., அருகில் அமைந்துள்ளது. ஆனால், பகை நாடாகவே உள்ளது. இந்திய - இலங்கையின் பகைமை உணர்வு,
 இலங்கை, காப்பாற்றுவது ,எளிதான காரியமா?

இலங்கை, இன்று மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் பரிதாபத்துக்குரிய நிலைக்கு விழுந்த காரணம், அரசியல்வாதிகளின் ஊழலும், ராஜபக்சே குடும்ப வாரிசு ஊழல் அரசியலும், சீனாவின் ராஜதந்திர கடன் பொறியும் தான்! அந்நாட்டுடைய கலாசார தன்மை, உறவு கொண்டாடி வஞ்சிப்பது!இலங்கை, இந்தியாவின் தென்கோடியில், 54 கி.மீ., அருகில் அமைந்துள்ளது. ஆனால், பகை நாடாகவே உள்ளது. இந்திய - இலங்கையின் பகைமை உணர்வு, இன்று நேற்றல்ல...
சரித்திர ஆய்வாளர்கள் கூற்றுப்படி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வளர்ந்தது. இலங்கையின் பவுத்த மத மன்னர்கள், அண்டை நாடான இந்தியா தன்னை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, பகையாகவே கருதினர். சோழர்களால் பல முறை இலங்கை படை எடுக்கப்பட்டது.


பொறாமைகடந்த, 1948 சுதந்திரத்திற்கு பின் சிங்கள, பவுத்தர்கள், ஈழத்தமிழ் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தி அடக்கினர்; ஒடுக்கினர்.ஆங்கிலேயர் காலத்தில், மூன்று லட்சம் ஈழத்தமிழர்கள், நன்கு படித்து, அரசு உயர் பதவிகளை அடைந்தனர். இதனால், சிங்களர்களுக்கு பொறாமையும், கோபமும் ஏற்பட்டது. தேயிலை தோட்டத்தில் வேலை செய்த, 30 லட்சம் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள், தம்மை அடிமைப்
படுத்தி விடுவரோ என்று சிங்களர்கள் பயந்தனர்.ஆங்கிலேயர் காலத்தில் சிங்களம், தமிழ் இரண்டும் ஆட்சி மொழியாக இருந்தன. சுதந்திரம் பெற்ற பின், சிங்களர்கள், தமிழ் மக்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுத்து, நாட்டை விட்டு விரட்ட முயன்றனர்; தமிழ் மொழியை, ஆட்சி மொழிப் பட்டியலில்இருந்து நீக்கினர்.

சரித்திரத்தின் பின்பக்கங்களை புரட்டிப் பார்த்தால், இலங்கையின் வஞ்சக செயல்களை, அந்நாட்டு ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாகஅறியலாம்.அப்போதைய இந்திய பிரதமர் நேரு - இலங்கை பிரதமர் கோடலாவலாவின் 1954, ஜன., 14 ஒப்பந்தப்படி இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரையும், வெளியேற்ற நினைத்தார் கோடலாவலா; நேரு எதிர்த்தார்.சாஸ்திரி - சிறிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் - 1964படி, மலைவாழ் தமிழர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்ப பண்டாரநாயகா திட்டமிட்டார். இதை இந்தியா எதிர்த்தது. வெறும் மூன்று லட்சம் பேருக்கு மட்டும் குடியுரிமை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, மற்றவர்களுக்கு குடியுரிமையை மறுத்தது.இந்திரா - சிறிமாவோ பண்டாரநாயகா 1974 ஒப்பந்தப்படி, இந்தியா - இலங்கையின் புவிசார் அரசியல் உறவுக்காக, இந்திரா, கச்சத்தீவை தாரை வார்த்தார். அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர், தி.மு.க., தலைவர்
கருணாநிதி.ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் - 1987ல், ராஜிவ் விடுதலைப்புலிகளை அடக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்; அது தோல்வியுடன் திரும்பியது.


latest tamil news

தள்ளுபடிஒப்பந்தப்படி இலங்கையை மாகாணங்களாக பிரித்து, கூட்டாட்சியில் தமிழ் ஆட்சி மொழி, காவல்துறையில் அதிகாரம் கொடுப்பது போன்ற முடிவுகளை, இலங்கை உச்சநீதிமன்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தள்ளுபடி செய்தது.உள்நாட்டுப் போரில் இந்தியா அனுப்பிய, 80 ஆயிரம் வீரர்கள் கொண்ட அமைதிப்படையை, அன்றைய பிரதமர் பிரேமதாசா, 24 மணி நேரத்தில் திரும்பிப் போகும்படி உத்தரவிட்டார்.இலங்கையின் வஞ்சக செயலாக, 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் விமான படையினருக்கு எரிபொருள் ஏற்றி, இந்தியாவை தாக்க அனுமதித்தது.

கடந்த, 1970 முதல் 1980 வரை அமெரிக்காவுடன் ராணுவ தளம் அமைக்க உதவியது. அமெரிக்கா உளவுத்துறை, இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு உதவியாக ராணுவ முகாமை அமைத்தது.
இந்திரா, விடுதலைப்புலிகளுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் ராணுவப் பயிற்சி கொடுத்து, தமிழகத்தில், அ.தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., மூலமாக உதவி புரிந்தார்.
அன்று இலங்கை, ராணுவம் பயிற்சி இல்லாத அலங்கார ராணுவமாக இருந்தது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில், பல சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த, 2005ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சே அரசு ரகசியமாக சீனாவோடு நட்பு கொண்டு, ராணுவ உதவி கோரியது. இந்த தருணத்தில் இலங்கை, 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களையும், தளவாடங்களையும் பெற்றது. அப்போது, இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, இலங்கைக்கு உதவி புரிந்தது.
கிட்டத்தட்ட 24 ஆண்டு கள் நடந்த ஈழப்போரில், 2007ல் புலிகளுக்கு வடகொரியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஆயுதக்கப்பலை, தென்சீனக் கடலில் சீன கடற்படை சுட்டு வீழ்த்தியது.
இதனால், ஆயுதம் இல்லாமல் புலிகள் போரில் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போரில் ஈழமக்கள், முதியோர்,பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணியர் என்று பாரபட்சம் இல்லாமல் சுட்டுக் கொன்றனர், இலங்கை ராணுவத்தினர். ஈழப்போர் 2009ல் முடிவுக்கு
வந்தது.ஈழப்போருக்கு பின், சீனாவின் ராஜதந்திர கடன் பொறி ஆரம்பமானது.கடனுதவிகள், இலங்கையை அடிமையாக்கியது. அது, இன்று பொருளாதார சீர்குலைவு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இலங்கையின் மொத்த கடன், 50 பில்லியன் டாலர். சீனாவிடம், 10 பில்லியன் டாலரும், ஜப்பானிடம், 2 பில்லியன் டாலர்கள், ஏசியன் டெவலப்மென்ட் பேங்க், உலக வங்கி, சர்வதேச நாணய வங்கி 20.7 பில்லியன் டாலர் வாங்கியது.
சீனாவிடம் கடனுக்கு வட்டி கட்டுவதற்கு, 13.8 பில்லியன் டாலர். கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி, மருந்துகள் வாங்க, 2.44 பில்லியன் டாலர்.


ஏற்றுமதிதேவையான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு, 14.4 பில்லியன் டாலர் என, இப்படி கடன் கட்ட முடியாத அளவு உள்ளது.இலங்கையின் பொருளாதாரம் இறக்குமதியை நம்பி தான் உள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா இல்லாமல் போய் விட்டது. சீனாவிடம் வாங்கிய கடனில், ராஜபக்சே அரசு, 3 லட்சம் பேருக்கு கட்டாய வேலை, ஒரு குடும்பத்திற்கு வாரத்திற்கு, 6 கிலோ இலவச அரிசி, அரைக் கிலோ மீன், குடும்பத்திற்கு மாதம், 6,000 ரூபாய் மானியம் என்று 'அள்ளி' விட்டது.
போதாக்குறைக்கு ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விட்டது. இவை அனைத்தும், விலைவாசி ஏற்றத்திற்கு காரணம். ஒரு டாலருக்கு, இன்றைய தினத்திற்கு இலங்கை ரூபாயின் மதிப்பு 300 என ஆகி உள்ளது.இலங்கையில் சீனாவின் முதலீடு ராஜதந்திர கடன் பொறியாக மாறியது எப்படி?உலகத்தில் சீனாவின் கடன் வழக்கத்தை விட சற்று வித்தயாசமானது. வட்டி விகிதம், 6 சதவீதம். ஒரு அரசு கடன் பெற அடமானமாக, பொதுத்துறை கம்பெனிகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை கொடுக்க வேண்டும்.
உதாரணமாக சீனாவின் கடனில் மூழ்கிய அம்பாந்தோட்டை துறைமுகம், இந்த திட்டங்களை செயல்படுத்த சீனாவின் கம்பெனிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தேவையான கட்டுமான பொருட்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும்.
சீனாவின் பணம் முழுக்க சீனாவுக்கு சென்று விடுகிறது. இந்த திட்டங்களால் இலங்கை மக்களுக்கு எந்தவித வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
திட்டங்கள் குறித்த காலத்தில் முடியாவிட்டால், நீண்ட காலம் வட்டி கட்ட வேண்டிய நிலை. வட்டியை கட்ட கடன் வாங்குவது; இது தான் கடன் பொறி.
உலக ஏழை நாடுகள் அனைத்தும் சீனாவிடம் கடன் வாங்குவதற்கு காரணங்கள், உலக வங்கி சர்வதேச நிதி மையம், ஆசியன் வங்கி இவர்களுடைய கடன் 3 சதவீதத்துக்கு குறைவு.
ஆனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் அவர்களுடைய கண்காணிப்பில் நடக்க வேண்டும்.

இலவச திட்டங்கள் வாரி வழங்கி, நம் ஊர் போல் கமிஷன் அடிக்க முடியாது. வேலைவாய்ப்பை உண்டாக்க வேண்டும். ஆனால், சீனாவின் கடனில் எந்தவித நிபந்தனையும் கிடையாது; இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு வசதியானது. உள்கட்டமைப்புக்கு வாங்கிய கடன் அந்த காலகட்டத்தில் முடிக்காவிட்டால், திட்டத்தை முடிக்க வட்டியுடன் கடன். சீனாவின் கடன் பொறி.
தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமேசிங்கே, எந்த பதவியையும் முழுமையாக வகித்தவர் இல்லை. இலங்கையை இவர் திறம்பட மேம்படுத்த முடியாது என்றே கூறலாம்.உணவுக்காக வீதி வீதியாக இறங்கி போராட்டம் நடத்தும் சிங்களர்களுக்கு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு இன்னும் தீரவில்லை என்பதையும் நாம் இங்கு
மறக்கக் கூடாது.நம் நாடும், இலங்கைக்கு சில காலம் மட்டுமே உதவிகள் செய்ய முடியும்; நீண்ட கால உதவி, நம் பொருளாதாரத்தை பாதிக்கும். ஏழ்மையில் தவிக்கும் நாட்டை மேம்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஒரு நாடு எப்படி ஆட்சி செய்யக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகி விட்டது இலங்கை.

சு.அர்த்தநாரி
பேராசிரியர்,
இதய மருத்துவர்
98843 53288

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
22-மே-202218:23:11 IST Report Abuse
Viswam பிளவு பட்ட தமிழ் இனம் கூடவே மத மாற்ற கும்பல்களின் (குறிப்பாக பாதிரிகள்) பிரித்தாளும் நயவஞ்சகமும் இலங்கை தமிழர்களை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது. சொல்புத்தி சுயபுத்தி இல்லாத சிங்களவனுக்கு ஆளத்தெரியாமல் நாட்டை தாரை வார்த்துவிட்டார்கள். இவர்களை கரை ஏற்றுவது கடினம். இந்தியா இதில் நுழைந்தால் நமது இறையாண்மைக்கு தீங்கு நேரிடலாம். ரணபூமி தொடரும். அவர்களே தம்மில் அடித்துக்கொண்டு மிஞ்சியவர்கள் நல்வழிக்கு வரட்டும்
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
22-மே-202217:15:50 IST Report Abuse
thonipuramVijay Ithuthaan samayam ...
Rate this:
Cancel
22-மே-202215:00:02 IST Report Abuse
ஆரூர் ரங் சீனத் தொழிலதிபர்கள் வேற்று நாடுகளில் லஞ்சம் தருவதில்லை. அவர்களுக்கு பதில் சீன அரசே அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் அன்னியச் செலாவணியில் அன்னிய முதலீடாக கொடுத்து😉 விடுகிறது. இலங்கையில் இரண்டு கட்சிகளும்(இங்குள்ள இரு டிராவிடியா கழகங்கள்போல) இது போல பயன்பெற்றவைதான். மக்கள்🤤 இவர்களை நம்பும் வரை நாடு தேறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X