தாமதமாக வந்த தேர்வர்கள்அனுமதி மறுத்ததால் மறியல்

Added : மே 22, 2022 | |
Advertisement
திண்டிவனம்:திண்டிவனம் அருகே டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டிவனத்தில் 17 தேர்வு மையங்களில் நேற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2-ஏ தேர்வு நடந்தது. இதில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பி.வி.பாலிடெக்னிக் கல்லுாரி மையத்தில் காலை 9:00 மணிக்குப் பிறகு, 14 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத
தாமதமாக வந்த தேர்வர்கள்அனுமதி மறுத்ததால் மறியல்

திண்டிவனம்:திண்டிவனம் அருகே டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாமதாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டிவனத்தில் 17 தேர்வு மையங்களில் நேற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2-ஏ தேர்வு நடந்தது. இதில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பி.வி.பாலிடெக்னிக் கல்லுாரி மையத்தில் காலை 9:00 மணிக்குப் பிறகு, 14 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர்.தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


ஆனால் 30 நிமிடம் தாமதமாக வந்ததால், 14 பேருக்கும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர்கள் பாலிடெக்னிக் கல்லுாரி எதிரே திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் காலை 9:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரோஷணை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் 9:45 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களிடம், சப் இன்ஸ்பெக்டர், தேர்வு நடைமுறை குறித்து விளக்கம் அளித்து, அதிகாரிகள் மறுத்து விட்ட தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X