ராஜிவ் நினைவிடத்தில் அழகிரி 'வீர வசனம் !'

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் உயிர் இழந்த இடத்தில் அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31 ம் ஆண்டு நினைவு தினமான நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது கே.எஸ்.அழகிரி
 ராஜிவ் நினைவிடம், அழகிரி 'வீர வசனம் !'

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் உயிர் இழந்த இடத்தில் அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31 ம் ஆண்டு நினைவு தினமான நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது கே.எஸ்.அழகிரி கூறியதாவது-:ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. தற்போது கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது.இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம். மனிதபிமானத்தோடு வாழ்வது தான் மனித தன்மை. பழிவாங்குவது என்பது மனித தன்மை அல்ல. மிருகங்களுக்கு கூட பழிவாங்குகிற குணம்
கிடையாது. ஆனால், ஒரு சிலர் பழிவாங்கும் மனப்பான்மையோடு வாழ்கின்றனர்.


latest tamil news




தமிழகம் எப்போதுமே நியாயத்திற்கு பெயர்பெற்ற நாடு.
தன்னுடைய மகன் ஒரு கன்றின் மீது தேரை ஏற்றி கொன்றான் என்பதற்காக, மகனை தேரை ஏற்றி கொன்ற சோழ பரம்பரையை சேர்ந்தவர்கள் நாங்கள். நீதி வழங்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். குற்றம் செய்தவர்கள் தண்டனைஅனுபவிக்க வேண்டும் என சொல்கிறோம். குற்றவாளி குற்றவாளிதான். குற்றவாளி கடவுளாக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இவ்வளவு பேசினாலும், ராஜிவ் கொலைக் குற்றவாளியை ஆரத் தழுவி, ஆனந்தக் கண்ணீர் வடித்த தி.மு.க.,வுடன் கூட்டுறவை முறித்துக் கொள்ள மனமில்லை என்பது போல், அது குறித்து எதுவும் பேசாமல் நகர்ந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
22-மே-202219:15:17 IST Report Abuse
Nakkeeran முதல் பாதி நியூஸ் இது. அடுத்த பாதி அறிவாலயத்தின் வாசலில் நின்று கொண்டு ராஜ்ய சபா சீட்டுக்கு திருவோடு ஏந்துவது
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
22-மே-202218:53:46 IST Report Abuse
jayvee நீங்க சோழர் பரம்பரையா.. ? சோழஅ பரம்பரைக்கு பெருத்த அவமானம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-202215:29:55 IST Report Abuse
Bhaskaran தயவுசெய்து மானம் ரோசம் உள்ள மனிதர்களை பற்றிய செய்திகளை மட்டும் போடவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X