வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, :ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள அமைப்பு குவாட். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, இரண்டாவது குவாட் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்தது.
இந்நிலையில், மூன்றாவது குவாட் மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை மறுதினம் நடக்கிறது.இதில் பங்கேற்க பிரதமர் மோடி, ஜப்பானுக்கு இன்று இரவு புறப்பட்டு செல்கிறார்.
ஜப்பானில் 40 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்பதுடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, இரு தரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.அத்துடன், 40க்கும் அதிகமான ஜப்பான் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்தித்து பேசும் பிரதமர், அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யஅழைப்பு விடுக்கிறார்.உக்ரைன் - ரஷ்யா விவகாரம் பற்றிதான், குவாட் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிலிருந்து நாளை மறுதினம் இரவு, தாயகத்துக்கு புறப்படுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE