பெண் மீது புகாரளித்த பாதிரியார் மீது குற்றச்சாட்டு

Added : மே 22, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாதிரியார் காட்ப்ரே நோபல். இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவு மற்றும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.அதில், அண்ணாநகரில் வசிக்கும் மரியம் செல்வம் என்ற பெண், படித்த கிறிஸ்தவ இளைஞர்களை குறிவைத்து,வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.இந்த



சென்னை : சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாதிரியார் காட்ப்ரே நோபல். இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவு மற்றும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.அதில், அண்ணாநகரில் வசிக்கும் மரியம் செல்வம் என்ற பெண், படித்த கிறிஸ்தவ இளைஞர்களை குறிவைத்து,வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.இந்த புகாரில், ஐந்து பிரிவின் கீழ், மரியம் செல்வம் மீது பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மரியம் செல்வம் நேற்று புகார் அளித்தார்.இதுகுறித்து, மரியம் செல்வம் கூறுகையில், ''பாதிரியார் காட்ப்ரே நோபல் என்பவரின் மகனுக்கும், எனக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக பேச அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்தார்,'' என்றார்.
'இதுகுறித்து முன்கூட்டியே ஏன் புகார் அளிக்கவில்லை' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மழுப்பலான பதிலை கூறிவிட்டுச் சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X