சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் தலைமறைவு

Added : மே 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராணிப்பேட்டை: சகோதரிகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்ததால், தந்தையை கொன்று டிரம்மில் வைத்து புதைத்த மகன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். குமரேசன் மனைவி இறந்துவிட்டார்.
சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் தலைமறைவு

ராணிப்பேட்டை: சகோதரிகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்ததால், தந்தையை கொன்று டிரம்மில் வைத்து புதைத்த மகன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.
குமரேசன் மனைவி இறந்துவிட்டார். மூத்த மகள், காஞ்சனா மாலாவின் கணவரும் இறந்து விட்டார். இதனால், அவரும், குமரேசனும் முதல் தரைதளத்தில் வசித்தனர். தரைதளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு சொந்தமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதம் 2.5 லட்சம் ரூபாய் வாடகை வந்துள்ளது. தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகள்களுக்கே செலவு செய்ததால் குணசேகரன் தனது தந்தை மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் காஞ்சனா மாலா கடந்த 15ம் தேதி வெளியே சென்ற போது வீட்டில் குமரேசன் தனியாக இருந்ததுள்ளார் அந்த நேரத்தை பயன்படுத்தி ஆத்திரத்தில் சொந்த தந்தையை கொடூரமாக கொன்று டிரம்மில் அடைத்து அதில் உப்பினை கொட்டி மகன் குமரேசன் பதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதாக கூறி நிலத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது வெங்கடேசனிடம் தனக்கு சூனியம் வைத்திருப்பதாகவும், அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து பிலாஸ்டிக் டிரம்மில் அடைந்துள்ளதாகவும் புதிதாக வாங்கும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் பெருமாளின் உதவியோடு காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த19 ஆம் தேதி பட்டபகலில் புதைத்ததாக கூறப்படுகிறது.

தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த காஞ்சனாமாலா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமரேசன் மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியபடி அங்காங்கே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது குணசேகரன் திடீரென மாயமாகியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசனை சந்திக்க சென்றதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் உதவியோடு வெங்கடேசன் மற்றும் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், குமரேசன் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இடத்திற்கு சென்று உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தலைமறைவான குணசேகரனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-மே-202200:01:41 IST Report Abuse
Matt P கொலை என்பது மஹாபாதகம் தான். இவரது தந்தை மூன்று பெண்களுக்கும் வருமானத்தை பிரித்து கொடுத்திருக்கிறார். மறைந்தவருக்கு ஒரே ஆண்மகன். வருமானத்தை பெண்களுக்கு மட்டும் பிரித்து கொடுத்திருக்கிறார். பொதுவாக ஒரே மகன் என்றால் தனியாக கவனித்து செல்லமாக வளர்ப்பதுண்டு நமது கலாச்சாரத்தில் சரியோ தவறோ அதுவேறு விஷயம். பெற்றோர் பணத்தால் பிரித்து நடத்தும்போது, பணத்தாசையினால் மகன் வெறுத்தார் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, தந்தை தன்னிடம் பாசம் இல்லாமல் என்று ஏங்கும் எண்ணம் கூட உருவாகலாம். மகனுக்கும் குழந்தை மனைவி என்று வாழ்க்கை. ஒழுங்காக நடந்திருக்கலாம். தந்தை என்பவர் எல்லோரும் நமது குழநத்தைகள் என்று ஒரு அனுசரிப்போடு வாழ்ந்திருக்க வேண்டும்.. அவரும் ஏதோ காரணத்தை கருதி அப்படி செய்திருக்கலாம்.. மகநின் மனநிலை அவர் தந்தை என்பதை மறந்து மனதில் ஒரு இறுகிய நிலை ஏற்பட்டு மனதில் குழப்பப்பட்டு அவரால் மாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார். சகோதரிகளும் ,தந்தையும் தன்னை தனிமைப்படுத்திப்படுத்தி விட்டார்களே என்ற ஏக்கமும் ஏற்பட்டிருக்கும்... அதுவும் இவர் வீட்டிலையே வாழ்ந்து . இப்படி ஒருவன் தன தந்தையையே கொல்ல முடியுமானால் அவன் மனநிலை எப்படி மாறியிருக்குமோ என்று தான் நினைக்க முடிகிறது. தற்போது சிடிடிவி காமெராவால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டது. இதுவே ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் கண்டுபிடிக்க முடிந்து இருக்குமா என்றால் சந்தேகமே. பணம் இருந்தும் இப்படி சீரழிவை தேடி கொள்ள வேண்டியதாகி விடுகிறது. முடிந்த அளவு மனிதர்கள் வீம்பை கைவிட்டு அனுசரித்து வாழ்வது தேவை. பிரித்து பார்க்கும் எண்ணம் சமுதாயத்தில் மட்டுமல்ல குடும்பங்களில் இருப்பதும் தவறு தானே.. தந்தையையும் பிரிந்து சகோதரன் வாழ்க்கையும் நாசமாகி., பாசமான தந்தை கொடூர கொலைக்கு ஆளானதால் குடும்பத்தில் மற்றவர்களின் மனநிலைக்கும் பாதகம் ஏற்படும் வாழ்க்கை ஏற்படாமல் பார்த்தல் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X