எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

Added : மே 22, 2022 | |
Advertisement
திருச்சி : திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்திய போலீசார் டிராவல் பேக்கில் அனாதையாக கிடந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கஞ்சாவை கைப்பற்றினர்.ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. பரத் உத்தரவுப்படி எஸ்.ஐ.க்கள் பிரேம்குமார் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் புவனேஸ்வரில்



திருச்சி : திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்திய போலீசார் டிராவல் பேக்கில் அனாதையாக கிடந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கஞ்சாவை கைப்பற்றினர்.

ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. பரத் உத்தரவுப்படி எஸ்.ஐ.க்கள் பிரேம்குமார் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலிலும் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்துார் செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சோதனை நடத்தினர்.
அதில் ஜனசதாப்தி ரயிலில் ஒரு பெட்டியில் கறுப்புக் கலர் டிராவல் பேக் அனாதையாக கிடந்தது.அந்த டிராவல் பேக்கை கைப்பற்றி விசாரித்த போது பேக்கிற்கு உரிமை கோராததால் போலீசார் பேக்கை பிரித்துப் பார்த்தனர். அதில் நான்கு பொட்டலங்களாக 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா கடத்தியது யார்? என்று விசாரித்து வருகின்றனர்.-



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X