பாக்., பெண் உளவாளிக்கு தகவல்களை பகிர்ந்த ராணுவ வீரர் கைது

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய
Caught, honeytrap, Armyman, leakedinfo, woman ISI, agent

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கடந்த சில நாட்களாக பிரதீப் குமாரை கண்காணித்து வந்தனர். அதில், தகவல்கள் பரிமாறுவது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 18 ம் தேதி பிரதீப் குமாரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


பிரதீப் குமாரிடம் நடந்த விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில், பாகிஸ்தான் பெண் உளவாளி அவருக்கு அறிமுகமாகியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் இருந்து பிரதீப் குமாருக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, காதல் வசனங்களை பேசியும், திருமணம் செய்வதாக கூறி ஆசை காட்டியும் ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை அந்த உளவாளி பெற்றது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy - NY,யூ.எஸ்.ஏ
22-மே-202221:05:21 IST Report Abuse
Ramaswamy இவனை தூக்கிலிடுங்கள்.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202220:02:11 IST Report Abuse
Ramaraj P அப்ப பெரும்பாலும் தீவிரவாதிகள் இந்துக்கள் இல்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-மே-202214:44:05 IST Report Abuse
Vena Suna ராணுவம் இதை சும்மா விடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X