என்ன தான் இடைவேளை விட்டு நடித்தாலும் ‛சாணி காகிதம்' படத்தில் சும்மா தரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலை அள்ளிய நம்ம அழகு நடிகை கீர்த்தி சுரேஷ் ஹேப்பியாக மனம் திறக்கிறார்...
‛சாணி காகிதம்' படத்தில் செல்வராகவனுடன் நடித்தது?
அவர் ஒரு இயக்குனர் என்றாலும் நடிகராக தான் பார்த்தேன். இயக்குனர் சொல்வதை நடித்துவிட்டு சென்று விடுவார். அப்படி தான் தினம் ஷூட்டிங் நடக்கும்; ஏதுவும் பேச மாட்டார். அறிமுக நடிகர் போலவே இருப்பார். பெண் கான்ஸ்டபிள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த படம்.
திடீரென எப்படி இவ்வளவு எடையை குறைத்தீர்கள்?
‛மகாநடி' படத்துக்கு பின் 7 மாதங்கள் வீட்டில் இருந்தபோது உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என இருந்தேன். அதற்கு பிறகு எடையை குறைத்தேன்.
அண்ணன் செல்வராகவன், தம்பி தனுஷ் உடன் நடித்த அனுபவம்?
‛சாணி காகிதம்' டிரெய்லர் பார்த்து தனுஷ் போன் பண்ணாரு. ‛செல்வராகவன் செம்மையா நடிக்கிறாரு, எனக்கு பக் பக்னு இருக்குனு' கூறினேன். ‛ஆமா நானே அவர்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன், வேற மாதிரி நடிச்சு காட்டுவாரு'னு தனுஷ் கூறினார். ரெண்டு பேருடனும் நடித்ததில் மகிழ்ச்சி.
சிவகார்த்திகேயன் உங்கள மறந்துட்டார் போல?
ஒரு படம் மட்டும் நடிச்சிருந்தா கண்டிப்பா கேட்டிருப்பேன். அவர் கூட 3 படங்கள் நடிச்சிருக்கேன். நிறைய டைம் இருக்கு... நாங்க நடிக்க வேண்டிய கதைகள் கண்டிப்பாக வரும்போது சேர்ந்து நடிப்போம். விஜய், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி கூடவும் நடிக்க வெயிட் பண்றேன். மணிரத்தினம், ராஜமவுலி, ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் ஆசை.
தமிழ் படங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியல?
மகேஷ் பாபு படத்தில் இருந்து தெலுங்கு படங்கள் நடிச்சேன், தமிழில் ‛அண்ணாத்தை'க்கு பிறகு ‛சாணி காகிதம்', அடுத்து ‛மாமன்னன்' பண்றேன். தெலுங்கு, தமிழ்னு பிரித்து பார்க்கவில்லை.
சாணி காகிதம் ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆனது குறித்து?
ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆகி உலகளவில் ரீச் ஆனதால் பலர் பார்த்து ரசித்தனர். ஆனால், தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் நன்றாக தான் இருந்திருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE