72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: அண்ணாமலை கெடு

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (75) | |
Advertisement
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சாமானிய மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகும்போது சர்வதேச
petrol, diesel, bjp, annamalai, dmk,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சாமானிய மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6,376 டாலர் ஆக இருந்தது. தற்போது 7,800 டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், நமக்காக பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்துள்ளார். இதனால், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் விலை குறைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


பெட்ரோல், காஸ் விலை குறைப்பதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. இதனை நம்பி மக்களும் ஓட்டு போட்டனர். ஆனால், விலையை குறைக்காமல் அவர்கள் காரணங்களை கூறுவதை மக்கள் பார்க்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை குறைப்பதாக அரசியல் லாபத்திற்காக கூறிவிட்டு சப்பை கட்டு கட்டுகிறார்கள். இது மக்கள் விரோத அரசு. மக்கள் கண்டிக்க வேண்டும். முன்னர், விலை குறைப்பு குறித்து காரணம் கேட்டால், தமிழக நிதியமைச்சர் விதண்டவாதம் வைக்கிறார். நேற்று மீண்டும் கேட்ட போது, புதிய காரணங்களை வைக்கிறார். இந்த அரசு விடியாத அரசு. செயல்தன்மை இல்லாத அரசு பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து திமுக அரசு செயல்படுகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்தது. 72 மணி நேரத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
23-மே-202212:30:55 IST Report Abuse
karuppasamy அட அறிவாளி மக்களே பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் பெட்ரோல் விலை என்ன. வந்த பின் என்ன என்று அண்ணாமலிடமே கேளு ங்கள் அவர் ஓடிவிடுவார் . காதில் பூ சுற்றுகிறார்கள் . வேல்பிடித்து ஒருவர் டில்லி சென்றுவிட்டார் . இவர்
Rate this:
raja - Cotonou,பெனின்
23-மே-202217:33:25 IST Report Abuse
rajaஆமா அதே மக்கள் தான் அவர்கள் ஆச்சிக்கு வரும்போது எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேட்க தொடக்கி மோடி அரசின் மீது எந்த தவறும் இல்லை என்று உணர தொடக்கி விட்டார்கள்... மேலும் திருட்டு திமுகாகவைபெட்ரோலிய பொருளியல் மீதி திமுகாவின் பங்கு என்ன என்று கேட்கவும் தொடக்கி விட்டார்கள்.... ஒரு மாத்திப்பு கூடுதல் செய்யாமல் ரூவா 46 மாநில வரியாக வாங்கி கொள்ளை அடிக்கிறது இந்த கேடுகெட்ட விடி யா மொஞ்சிகள் அரசு என்றும் பேச தொடக்கி விட்டார்கள்....ஆப்பை செருக காத்திருக்கிறார்கள் இந்த திருட்டு திராவிடத்துக்கு........
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
23-மே-202212:06:31 IST Report Abuse
raja சூப்பர் சிங்கம் புறப்பட்டு விட்டது... கேடுகெட்ட திருட்டு திராவிடணுவொளுக்கு தமிழர்கள் ஆப்பை செருகி விரட்டியடிக்கும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது....
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அட என்ன எழவுடா சாமி!! பொழுது விடிந்ததும் அதைக் குறை இதைக் குறை என்று ஒரே குறைப்பாகத்தான் இருக்கிறது. 10 ஆண்டுகளாக மரத்த தமிழ்நாட்டை சீரழித்து வைத்துள்ளனர் அடிமைகள். இதை சரி செய்யவே இன்னும் 100 ஆண்டு ஆகும். பெட்ரோல் விலையை குறைத்து விட்டு பிச்சை எடுக்க எங்கே செல்வது சங்கிகளே???
Rate this:
raja - Cotonou,பெனின்
23-மே-202217:34:58 IST Report Abuse
rajaஅதுக்கு தானே இவன் வந்தவுடன் நூறு நாளில் விடியல் கிடைக்கினுமுன்னு ஒட்டு போட்டாங்க இப்போ நூறு வருஷமுன்னு சொல்லி மக்களுக்கு நல்லது செய்யாமல் பொங்கல் தொகுப்பில் 500 கோடி புறங்கை நக்கலாமா என்று மக்கள் கேட்க ஆரமித்து விட்டார்கள்............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X