இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது பற்றி ஒரு அலசல். தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. 'மியூச்சுவல் பண்ட்' வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக அமையும் தங்க இ.டி.எப்., பிரிவில், 11 லட்சத்திற்கும் மேல் புதிய முதலீட்டாளர்கள் நுழைந்திருப்பதுடன், இந்த ஆண்டில் 2,000

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது பற்றி ஒரு அலசல்.latest tamil newsதங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. 'மியூச்சுவல் பண்ட்' வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக அமையும் தங்க இ.டி.எப்., பிரிவில், 11 லட்சத்திற்கும் மேல் புதிய முதலீட்டாளர்கள் நுழைந்திருப்பதுடன், இந்த ஆண்டில் 2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்க தகவல் தெரிவிக்கிறது.

உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச நெருக்கடியால் உண்டான இடர் மற்றும் அதிக பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், பலரும் தங்க முதலீட்டை நாடுவதாக கருதப்படுகிறது. பாரம்பரிய முதலீட்டாளர்கள் பலர், தங்கள் தொகுப்பில் போதுமான தங்க முதலீடு பெற்றிருப்பதோடு, அண்மை விலை குறைவை சாதகமாக்கி, தங்க ஒதுக்கீட்டை ஈடு செய்துள்ளனர்.


இளம் தலைமுறைமுதலீடு நோக்கில் தங்கம் அளிக்கும் பலன் தொடர்பாக மாற்றுக் கருத்து இருந்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு, சர்வதேச இடர்களில் நிலையான தன்மை உள்ளிட்ட அம்சங்கள், தங்கத்தின் சாதகமான அம்சங்களாக அமைகின்றன. எனவே தான், முதலீடு தொகுப்பில் குறிப்பிட்ட சதவீதம் தங்கம் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. பாரம்பரிய முதலீட்டாளர்கள் இதை உணர்ந்திருந்தாலும், இன்றைய தலைமுறையினர் மாறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளனர்.

அவர்கள் மியூச்சுவல் பண்ட், சம பங்கு உள்ளிட்ட முதலீட்டு வழிகளை அதிகம் நாடுகின்றனர். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதை பழைய வழி மற்றும் அதிக பயனில்லாதது என கருதுகின்றனர். தங்க முதலீடு அலுப்பூட்டும் வழியாகவும் கருதுகின்றனர்.சம பங்கு, மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்றவற்றை நாடுவது வரவேற்கத்தக்கது என்றாலும், தங்க முதலீடு அளிக்கும் பலனையும் அறிந்திருக்க வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

முதலீடு தொகுப்பில் பரவலான தன்மையை அளிப்பது, வாங்கும் சக்தியை தக்க வைப்பது, பணமாக்கல் தன்மை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர். மேலும், தங்க முதலீட்டை பாரம்பரிய முறையில் நகை வாங்குவதோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்கின்றனர்.
நவீன வழிகள்பங்கு முதலீடு போன்றவற்றோடு ஒப்பிடும் போது தங்கம், நெருக்கடியான நேரங்களில் இடர் குறைந்ததாக அமைகிறது. உதாரணமாக, 2001ம் ஆண்டில் சம பங்குகள், 18 சதவீதம் சரிவுக்கு உள்ளான போது, தங்கம் 6 சதவீத பலன் அளித்தது. இதே போல, 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போதும், தங்கம் 26 சதவீத பலன் அளித்தது.


latest tamil newsஅதே போல பணவீக்கத்தின் மத்தியிலும் தங்கம் பலன் அளிப்பதாக இருக்கிறது. எனவே, தங்கம் தொடர்ந்து பொருத்தமான முதலீடு வாய்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. இளம் தலைமுறையினருக்கும் இது பொருந்தும்.இளம் தலைமுறையினர் தங்கள் முதலீடு தொகுப்பில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொண்டிருக்கும் வழியை பின்பற்றலாம்.


மேலும், நகை வடிவில் தங்கத்தை வாங்குவதை விட, இ.டி.எப்., அல்லது மியூச்சுவல் பண்ட் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.இளம் தலைமுறை நவீன தொழில்நுட்பம் சார்ந்த வழிகளை பயன்படுத்தி முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதால், தங்க இ.டி.எப்., போன்றவை ஏற்றதாக இருக்கும். தங்க சேமிப்பு பத்திரங்களையும் பரிசீலிக்கலாம்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahehkumar11 - chennai,இந்தியா
23-மே-202216:23:42 IST Report Abuse
mahehkumar11 பேராசையை விட்டு விட்டு நல்ல குணம், பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
23-மே-202208:34:51 IST Report Abuse
தமிழன் நேரடியாக தங்கம் வாங்கி விற்பனை செய்வதில் இன்று பல சிக்கல்களை நான் சந்தித்தேன். ஆபரணமாக வாங்கி விற்றால் அதிகமாக செய்கூலி, சேதாரம் என்று போகிறது. காயினாக வாங்கினால், விற்கும் போது சில கடைகள் வாங்கிக்கொள்ள மறுக்கின்றனர். மியூச்சுவல் பன்ட் போன்றவை அதிக risk எடுத்தே செய்ய வேண்டியுள்ளது. இன்று பணத்தை முதலீடு செய்து பணவீக்கத்திற்கேற்றார் போல் கொண்டு செல்வதென்பது மிகவும் கஷ்ட காரியமாக உள்ளது.
Rate this:
23-மே-202211:54:53 IST Report Abuse
ஆரூர் ரங்மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நடத்தும் கோல்டு இடிஎஃப் திட்டங்களில் நஷ்டமின்றி பாதுகாப்பாகவே தங்க🤔 முதலீடு செய்யலாம். கட்டணங்கள் மற்றும் சேதாரம் கிடையாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X