வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஓசூர் : ''ஆசைப்படலாம்; ஆனால், பேராசை படக்கூடாது. தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமென தெரியும்,'' என, தன் அமைச்சர் பதவி குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மாற்று கட்சியினர் இணையும் விழா, ஓசூரில் இன்று(மே 22) நடந்தது.
விழாவில் எம்.எல்.ஏ., உதயநிதி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும், எனக்கும் நல்ல தொடர்பு உண்டு. கடந்த 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்து, சென்னை சென்றேன். அப்போது தான், மாநில இளைஞரணி செயலராக அறிவிக்கப்பட்டேன்.

சட்டசபை தேர்தலில், ஒரு நாள் முழுதும் பிரசாரத்தை முடித்து சென்றேன். தற்போது எம்.எல்.ஏ.,வாக வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்கு வந்துள்ளதால், 'வருங்கால அமைச்சர்' என்று, மாவட்ட செயலர் பிரகாஷ் கூறினார்.
ஆசைப்படலாம்; பேராசை படக்கூடாது. தலைவர் ஸ்டாலினுக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று தெரியும். அதற்கான அனுபவம், உழைப்பு வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE