யாத்ரீகர்கள் அதிகரிப்பால்குப்பை கூளமான கேதார்நாத்

Added : மே 22, 2022 | |
Advertisement
டேராடூன்-இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், கேதார்நாத்துக்கு புனிதப் பயணம் நடைபெற்று வரும் நிலையில், யாத்ரீகர்கள் அதிகரிப் பால், மலைப் பகுதி குப்பை கூளமாக மாறியுள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை, 'சார்தாம்' என்றழைக்கப்படுகின்றன. இந்த நான்கு புண்ணிய
யாத்ரீகர்கள் அதிகரிப்பால்குப்பை கூளமான கேதார்நாத்

டேராடூன்-இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், கேதார்நாத்துக்கு புனிதப் பயணம் நடைபெற்று வரும் நிலையில், யாத்ரீகர்கள் அதிகரிப் பால், மலைப் பகுதி குப்பை கூளமாக மாறியுள்ளது.

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை, 'சார்தாம்' என்றழைக்கப்படுகின்றன. இந்த நான்கு புண்ணிய தலங்களுக்கு, ஹிந்துக்கள் யாத்திரை மேற்கொள்வர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த யாத்திரை நடக்கவில்லை. இந்நிலையில், இம்மாதம் 3ம் தேதியில் இருந்து சார்தாம் யாத்திரை துவங்கியுள்ளது.பல லட்சம் பேர் புனித யாத்திரை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அதிகளவில் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.'தேவபூமி' எனப்படும், 'கடவுளின் நிலம்' என்றழைக்கப்படும் உத்தரகண்டில், இந்த புனித தலங்கள் இயற்கை எழில் நிறைந்தவை. பனி படர்ந்த மலைகளில், யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.இவர்கள், வழியிலேயே கூடாரம் அமைத்து தங்குகின்றனர்.

சில இடங்களில், கூடாரங்கள் வாடகைக்கும் கிடைக்கும்.தற்போது, யாத்ரீகர்கள் அதிகரித்துள்ள நிலையில், கேதார்நாத்தின் பல இடங்கள் குப்பை கூளமாக மாறியுள்ளன. பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் என, யாத்ரீகர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இது, சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X