பிரபல பின்னணி பாடகி கேரளாவில் திடீர் மரணம்

Added : மே 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்-பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா சஜித், 46. மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட சங்கீதா, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை
பிரபல பின்னணி பாடகி கேரளாவில் திடீர் மரணம்

திருவனந்தபுரம்-பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா சஜித், 46. மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட சங்கீதா, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் திருவனந்தபுரம் மயானத்தில் நேற்று மாலை நடந்தன. மலையாள சினிமா உலக பிரபலங்கள் நேரில் சென்று, சங்கீதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.தமிழில், மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில், சங்கீதா பாடிய 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை...' என்ற பாடல், பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rauf thaseem - mawanella,இலங்கை
24-மே-202208:15:09 IST Report Abuse
rauf  thaseem இரங்கல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X