வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசு திட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுவது குறித்து நிதியமைச்சர் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
![]()
|
இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இல்லை என்கிற நிலை உருவாகியது. இதனை அடுத்து நடுத்தர வர்க்க மக்களின் நலன் கருதி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மூலமாக ஒன்பது கோடி பயனாளர்களுக்கு 200 ரூபாய் வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் இவர்களுக்கு 803 ரூபாய் விலைக்கு கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
![]()
|
தற்போது தலைநகர் டில்லியில் ஒரு சிலிண்டரின் விலை 1003 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு 200 ரூபாய் மாத மானியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியத்தை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் முன்னதாக அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த மானியம் அறிவிக்கப்பட்டாலும் மத்திய அரசுக்கு சமையல் எரிவாயு மூலமாக ஆண்டுக்கு 6 ஆயிரத்து 500 கோடி லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ள அவர் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் இந்த திட்டம் உதவும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 1018.50 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் 1029 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement