செய்திகள் சில வரிகளில்...

Added : மே 22, 2022 | |
Advertisement
ஜம்முவில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியான அக்னுாரில், பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒருவர் ஊடுருவுவதை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு பார்த்தனர். அவரை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். தப்பியோட முயற்சித்த அவரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சபீர்
செய்திகள் சில வரிகளில்...

ஜம்முவில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது


ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியான அக்னுாரில், பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒருவர் ஊடுருவுவதை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு பார்த்தனர். அவரை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். தப்பியோட முயற்சித்த அவரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சபீர் நவாஸ், ௨௧, என தெரிந்தது.

உ.பி.,யில் விபத்து7 பேர் பலி

சித்தார்த் நகர்: உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் திருமண கோஷ்டியை ஏற்றிக் கொண்டு, கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கட்யா கிராமம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்ற லாரி மீது மோதியது. இதில், காரில் இருந்த நான்கு பேர் இறந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மூன்று பேர் இறந்தனர். ''இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ௨ லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X