காய்கறி, பழம் பதப்படுத்தும் நிலையம் தயார்!  20 ஆயிரம் கிலோ இருப்பு வைக்கலாம்

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
வாலாஜாபாத் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகங்களில், காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் தயாராகி உள்ளது. இதன் வாயிலாக 20 ஆயிரம் கிலோ விளைப்பொருட்களை பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது.

வாலாஜாபாத் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகங்களில், காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் தயாராகி உள்ளது. இதன் வாயிலாக 20 ஆயிரம் கிலோ விளைப்பொருட்களை பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது.



latest tamil news


இதில், 60 ஆயிரம் ஏக்கரில் காய்கறி, பூ மற்றும் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், நெல் இருப்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், காய்கறி, பூ மற்றும் பழங்கள் உழவர் சந்தைகளில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.



வருவாய் இழப்பு


காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறுகாவேரிபாக்கம், உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் படப்பை, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், ஜமீன்ராயப்பேட்டை, கண்ணகி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய பல பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.விவசாயிகள் விற்பனைக்கு எடுத்து வரும் விளைப்பொருட்கள் சேதம் ஏற்படுவதோடு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.


latest tamil news


இதை தவிர்க்க, வேளாண் விற்பனை துறை வாயிலாக, தொடர் சங்கிலி மேலாண் திட்டத்தின் வாயிலாக, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் என, இரு இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. இதில் 20 ஆயிரம் கிலோ காய்கறிகள் சுத்தம் செய்து, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

இந்த வளர்ச்சி பணிகளை, வேளாண் விற்பனை துறை இயக்குனர் நடராஜன் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளார்.இந்த நிலையங்களில், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து உள்ளூர் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்ப உள்ளனர். இந்த திட்டத்தின் வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் குழுவில் இருக்கும் பல தரப்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.




உழவர் ஆர்வலர் குழு




இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது:சுங்குவார்சத்திரம், மதுராந்தகம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், காய்கறி, பழங்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. இதில் தலா 10 ஆயிரம் கிலோ விளைப்பொருட்களை தரம் பிரித்து, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். உழவர் உற்பத்தி நிறுவனம் மற்றும் உழவர் ஆர்வலர் குழுவினர் பயன் படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


ஒதுக்கீடு விபரம்

பதப்படுத்தம் நிலையங்கள் இருப்பு அளவு நிதி ஒதுக்கீடுசுங்குவார்சத்திரம் 10 ஆயிரம் கிலோ ரூ.5.60 கோடிமதுராந்தகம் 10 ஆயிரம் கிலோ ரூ.2.70 கோடி



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
23-மே-202210:54:43 IST Report Abuse
duruvasar என்ன ஒரு விளம்பர யுக்தி 20000 கிலோ என்றால் 20 மெட்ரிக் டன். அதாவது சாதாரண லாரி என்றால் ஒரு லோடு. பெரிய லாரி என்றால் 1 1/2 லோடுக்கும் குறைவு. ஒரு நாளைக்கு சென்னை போன்ற நகரங்களுக்கு 50 முதல் 100 லோடு காய்கறி பழங்கள் வரும். நல்ல ஏற்பாடு என்பதில் ஐயம் இல்லை ஆனால் ஏதோ சாதனைபோல் தம்பட்டம் அடிக்க ஒன்றுமில்லை. இதுபோல் ஒவ்வொரு சென்டரிலும் இந்த அளவிலான கோடவுன்கள் தேவை.
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
23-மே-202212:06:11 IST Report Abuse
தமிழன்இன்னும் எவ்வளவு பெரிதாக செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள்? எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதே விடுங்க ....
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-மே-202212:44:14 IST Report Abuse
Ramalingam Shanmugamஅருமையா சொன்னிங்க...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-மே-202210:48:06 IST Report Abuse
duruvasar இது ஏற்கனவே இருந்ததுதானே. இந்த விவரம் ஏன் இவ்வளவு நாளாக எந்த ஊடகமும் வெளியிடவில்லை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-மே-202206:49:30 IST Report Abuse
Kasimani Baskaran இதை விட பத்து மடங்கு அதிகம் காய்கறிகளை சேமிக்கும் கிட்டங்கிகள் இங்கு பல சூப்பர் மார்க்கெட்டில்க்கூட உண்டு. ஒரு மாதத்துக்கு தேவையான உணவு வகைகளை சேமித்து வைத்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X