சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'மாஜி' அமைச்சரிடம் சீறிய பழனிசாமி!

Added : மே 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
''ஒவ்வொரு பூவா எண்ணிப் பார்க்க போறாவளா வே...'' என, உரக்க சிரித்தபடியே வந்தார், அண்ணாச்சி.டீ கடையில் சாமி படத்துக்கு பயபக்தியுடன் பூ போட்டுக் கொண்டிருந்த நாயர் திடுக்கிட்டு திரும்பினார்.''அட, உம்மை சொல்லலை வே... நீலகிரி மாவட்டம், ஊட்டியில தோட்டக்கலை துறை சார்பா மலர் கண்காட்சி நடந்துச்சுல்லா... அதுல, பூக்களால பிரமாண்ட அலங்காரங்கள் செஞ்சிருந்தாவ வே... ''இதுக்கு
'மாஜி' அமைச்சரிடம் சீறிய பழனிசாமி!

''ஒவ்வொரு பூவா எண்ணிப் பார்க்க போறாவளா வே...'' என, உரக்க சிரித்தபடியே வந்தார், அண்ணாச்சி.டீ கடையில் சாமி படத்துக்கு பயபக்தியுடன் பூ போட்டுக் கொண்டிருந்த நாயர் திடுக்கிட்டு திரும்பினார்.''அட, உம்மை சொல்லலை வே... நீலகிரி மாவட்டம், ஊட்டியில தோட்டக்கலை துறை சார்பா மலர் கண்காட்சி நடந்துச்சுல்லா... அதுல, பூக்களால பிரமாண்ட அலங்காரங்கள் செஞ்சிருந்தாவ வே... ''இதுக்கு பூங்காவுல பூத்த மலர்கள் தவிர, பெங்களூரு, ஓசூர்ல இருந்தெல்லாம் மலர்களை வாங்கி பயன்படுத்தியிருக்காவ... ஒரு லட்சம் மலர்களை பயன்படுத்தி, வேளாண் பல்கலையின் முகப்பு தோற்றம், 45 ஆயிரம் மலர்கள்ல பொம்மைகள், அது இதுன்னு, பல லட்சம் மலர்களை பயன்படுத்தியிருக்காவ வே...''ஆனா, 'இந்த உருவங்கள் செய்ய லட்சக்கணக்குல மலர்கள் தேவைப்படுமா'ன்னு சிலர், 'டவுட்'டை கிளப்ப, அதிகாரிகள் வரை புகார் போயிட்டு... சீக்கிரமே விசாரணை நடக்க போவுது வே...'' என்றார் அண்ணாச்சி.''என்னடா மதுரைக்கு வந்த சோதனைன்னு, வேளாண் அதிகாரிகள் நொந்து போய் கிடக்கிறாங்க...'' என, அடுத்த தகவலை தட்டி விட்டார், அந்தோணிசாமி.''என்ன ஆச்சு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பிரதமரின், 'கிசான்' திட்டத்துல, விவசாயிகள் வங்கி கணக்குல வருஷத்துக்கு மூணு முறை தலா, 2,000 ரூபாய் 'டிபாசிட்' ஆகுதுங்க... மதுரை மாவட்டத்துல மட்டும், 1.20 லட்சம் விவசாயிகள், இந்த திட்டத்துல பதிவு செஞ்சு, பணம் வாங்கிட்டு இருக்காங்க... ''இதுல, 22 ஆயிரம் விவசாயிகள் மேல சந்தேகம் வந்து, வேளாண் துறை அதிகாரிகளை போன வருஷம் விசாரிக்க சொன்னாங்க... விசாரிச்சதுல, 4,000 விவசாயிகள் உயிரோடயே இல்லையாம்... ''ஒரு ரேஷன் கார்டை வச்சு ஒரே குடும்பத்துல நாலஞ்சு பேரு பணம் வாங்கி இருக்காங்க...ஆதார் அட்டையை வங்கி கணக்கோட இணைக்கும்போது, தில்லுமுல்லு வெட்ட வெளிச்சமாகிடுச்சுங்க... ''மதுரையில மட்டும் இப்படின்னா, தமிழகம் முழுக்க எத்தனை பேரோன்னு வேளாண் அதிகாரிகள் தலையை பிய்ச்சுக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''முன்னாள் முதல்வர் பழனிசாமி கோபத்தை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''அ.தி.மு.க., சார்புல ரெண்டு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வாகப் போறாளோன்னோ... அந்த பதவியை பிடிக்க அ.தி.மு.க., தலைவர்கள் பிரம்ம பிரயத்தனம் பண்ணிண்டு இருக்கா ஓய்... ''வர்ற 2024லயும், பா.ஜ., ஜெயிச்சு மத்தியில ஆட்சி அமைச்சிடும்... அப்ப, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அமைச்சரவையில இடம் கிடைக்கும்... 'அந்த நேரத்துல ராஜ்யசபா எம்.பி.,யா இருந்தா, தேர்தல்ல நிற்காமலே ஈசியா அமைச்சராகிடலாம்'னு அ.தி.மு.க., தலைவர்கள் கணக்கு போடறா ஓய்...''அதனால, இந்த முறை போட்டி பலமா இருக்கு... 'எங்களுக்கு சீட் கொடுங்கோ'ன்னு முன்னாள் அமைச்சர்கள் பலரும் அழுத்தம் கொடுக்கறா ஓய்...

''இதனால, டென்ஷனான கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை கூப்பிட்டு கடுப்படிச்சிட்டாராம்...''அப்ப, 'நீங்களும், வைத்திலிங்கமும் எம்.எல்.ஏ., ஆனதால, எம்.பி., பதவியை ராஜினாமா செய்யாதீங்கன்னு அப்பவே தலப்பாடா அடிச்சுண்டேன்... இப்ப, ரெண்டு சீட்டுக்கு 200 பேர் சுத்தி சுத்தி வரா... யாருக்கு தரதுன்னு தெரியலை'ன்னு கோபப்பட்டாராம் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மே-202215:19:26 IST Report Abuse
D.Ambujavalli பூவில் செய்த ஊழல் வாடி நார் மட்டும் மிஞ்சினால் எப்படி நிரூபிப்பார்கள்? கேஸ் தானாகவே வாடி வதங்கி விடும்😀
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
23-மே-202214:47:13 IST Report Abuse
sankar எம்பி பதவியெல்லாம் கிடைச்சா, தளுக்கா, ஜாலியா இருக்கலாம் ராஜ யோகம் தான். இந்த யோகம் கிடக்க அடிச்சிக்கிட்டு சாக வேண்டியது தான். மக்கள் சேவையா, மண்ணாங்ககட்டியா?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
23-மே-202214:16:29 IST Report Abuse
r.sundaram மூக்கணாங்கயிறு அதை விட்டுவிட்டு, இப்போ வாலை பிடித்தால் எப்படி. அப்போதே இப்படி செய்ய வேண்டாம் என்று ஏன் சொல்ல வில்லை? இதற்க்கு தீர்வு ஒரு பதவியில் இருக்கும்போது அடுத்த பதவிக்கு ஆசைப்பட்டால், அந்த பதவியின் தேர்தல் செலவை சம்பந்தப்பட்டவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும். ஒருவர் இரு தொகுதிகளில் தேர்தலில் நின்றால், ஒரு தொகுதியின் தேர்தல் செலவை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கு செலவு என்பது மக்கள் வரிப்பணத்தில் இருந்து தானே செலவழிக்கப்படுகிறது. ஆதலால் மக்களுக்கு இதை சொல்ல உரிமை இல்லையா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X