சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தமிழக காங்., தலைவர் அழகிரி: ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது, எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. தற்போது, கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம்.டவுட் தனபாலு: அந்தக் காலத்துல, நடிகவேள் எம்.ஆர்.ராதா, ரத்தக் கண்ணீர்னு ஒரு படம்
'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது, எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது. தற்போது, கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும் போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது. இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம்.

டவுட் தனபாலு: அந்தக் காலத்துல, நடிகவேள் எம்.ஆர்.ராதா, ரத்தக் கண்ணீர்னு ஒரு படம் எடுத்தார்... 100 நாட்களை தாண்டி பிய்ச்சிக்கிட்டு ஓடியது... வெற்றி பெற்ற படங்களின் 2ம் பாகம் எடுத்துட்டு இருக்கிற நம்ம கோலிவுட்காரங்களுக்கு, உங்களை வச்சு, 'ரத்தக் கண்ணீர் பார்ட் 2' எடுக்கலாம் என்ற யோசனை இன்னும் வராதது ஏன் என்பது தான், 'டவுட்!'

***

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்: தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு, 611 கோடி ரூபாய் தான் செலவு செய்துள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதியை, மாநில அரசுகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: 'மத்திய அரசு சொன்னதால, சொத்து வரிகளை உசத்தினோம்'னு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சொன்னாரே... இப்ப, மத்திய அமைச்சர் புகாருக்கு என்ன பதில் தரப் போறாரு... அது இருக்கட்டும்... மத்திய அரசு தந்த பணத்துல மீதம், 2,389 கோடி ரூபாய் எங்க போனதுங்கிற, 'டவுட்'டுக்காவது அவர் விளக்கம் தருவாரா?

***

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: சென்னை ஆர்.கே.நகரில் போதை மாத்திரை விவகாரத்தில், இளைஞர் ராகுல் படுகொலை; பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் என்ற தொழிலாளி அடித்துக் கொலை; தென்காசியை சேர்ந்த நெல் வியாபாரி அடித்துக் கொலை என தினமும் படுகொலைகள் நடந்து வருகின்றன. மேலும், பாலியல் குற்றங்கள், கொள்ளை சம்பவங்கள் அன்றாடம் நடந்து வருகின்றன. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, தமிழகத்தில் நிலவுகிறது.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில இந்த அளவுக்கு அக்கிரமங்கள், அநியாயங்கள் நடக்கலை... தி.மு.க., ஆட்சியில, மக்கள் ஒருவித பயத்துல தான் வாழுறாங்க... எங்களுக்கு என்ன, 'டவுட்'டுன்னா, இவ்வளவு அமளிதுமளிகள் நடந்தும், நம்ம போலீசார் என்ன செய்றாங்க... அவங்களது துப்பாக்கிகளை முதுகு சொறிய மட்டுமே வச்சிருக்காங்களா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மே-202215:13:20 IST Report Abuse
D.Ambujavalli 'இது எதுவுமே என் கவனத்துக்கு வரவில்லை என்றும், அவர் டைக்கட்ட பழகும்போது கழுத்து இருகிவிட்டது போல ' என்று சொல்வார் காவல்துறை அமைச்சரான முதல்வர் இதில் எல்லாம் அறிக்கை மாறாது
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
23-மே-202212:53:36 IST Report Abuse
raja வேறென்ன செய்ய முடியும் அறிவாலயத்தில் அவமதிக்கிறார்கள் என்று ஏற்கனவே கண்ணீர் விட்டவன்தானே நீ... இதுல சுயமரியாதை பகுத்தறிவுன்னு பேசிகிட்டு.....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-மே-202212:44:10 IST Report Abuse
duruvasar துப்பாக்கியை முதுகு சொரிய வெச்சது கூட மனிச்சுடலாங்கே ஆனா ரவையை உப்புமா செஞ்சி சாப்பிட்ட்டாங்களே/, இதுதாங்க கொடுமை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X