வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--மத்திய அரசு, லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரியை, 8 ரூபாயும்; டீசலுக்கான வரியை, 6 ரூபாயும் குறைத்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விற்பனையால் கிடைக்கும் வரி வருவாயில், மத்திய அரசை விட, தமிழக அரசின் பங்கு அதிகரித்து உள்ளது.
![]()
|
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் காலையில், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
தாண்டியது
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால், 2021ல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதன் காரணமாக, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத வகையில், லிட்டர், 100 ரூபாயை தாண்டியது.இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டீசல் விலை உயர்வால், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்ந்து, பல பொருட்களின் விலை அதிகரித்தது. 2021 நவ., 3ல், தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 106.66 ரூபாய்; டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின.மத்திய அரசு தீபாவளி பரிசாக, நவ., 3ல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் மீதான வரியை லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைத்தது.
அதிகரிப்பு
இதனால், மறுநாளான 4ம் தேதி, தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் விலை, 101.40 ரூபாயாகவும்; டீசல் விலை, 91.43 ரூபாயாகவும் குறைந்தது.அதற்கு அடுத்த நாளில் இருந்து, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலால், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. நடப்பாண்டு பிப்ரவரியில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால், 137 நாட்களுக்கு பின், மார்ச் 22ல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 102.16 ரூபாய்க்கும்; டீசல், 92.19 ரூபாய்க்கும் விற்பனையாகின. பின், அவற்றின் விலை தினமும் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், ஏப்., 6ல் பெட்ரோல், 110.85 ரூபாய்க்கும்; டீசல், 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
![]()
|
கோரிக்கை
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி, 8 ரூபாயும்; டீசலுக்கான வரி, 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நேற்று லிட்டர் பெட்ரோல், 8.22 ரூபாய் குறைந்து, 102.63 ரூபாய்க்கும்; டீசல், 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின.இதனால், மத்திய அரசுக்கு, லிட்டர் பெட்ரோல் மீது விதிக்கப்படும் கலால் வரியால் கிடைக்கும் வருவாய், 27.90லிருந்து, 19.90 ரூபாயாகவும்; டீசல் மீது விதிக்கப்படும் வரியால் கிடைக்கும் வருவாய், 21.80லிருந்து, 15.80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.அதேநேரத்தில், தமிழக அரசுக்கு, லிட்டர் பெட்ரோல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியால் 21.95 ரூபாயும்; டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியால், 18.03 ரூபாயும் வருவாய் கிடைக்கிறது.
இதனால், பெட்ரோல், டீசல் மீதான விற்பனையால் கிடைக்கும் வரி வருவாயில், மத்திய அரசை விட, தமிழக அரசின் பங்கு அதிகரித்துள்ளது.தமிழக அரசுக்கு, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியால், 2021 -- 22ம் நிதியாண்டில், 23 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 2 ரூபாயும்; டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்குமாறு, வாகன ஓட்டிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
1,300/ 7.00-லிட்டர் பெட்ரோல் விலை நிர்ணயம் ரூபாயில்-அடிப்படை விலை - - 57.13சரக்கு கட்டணம் -௦௦.- 20 காசுமத்திய அரசு கலால் வரி -19.90டீலர் கமிஷன் --3.௪௫தமிழக அரசின் 'வாட்' - 21.95--விற்பனை விலை - - 102.63------------------------------------------------------------------------------லிட்டர் டீசல் விலை நிர்ணயம் - ரூபாயில்-----------------------------------------------------------------------------அடிப்படை விலை - - 57.92சரக்கு கட்டணம் ---- - ௦௦. 22 மத்திய அரசு கலால் வரி --- 15.80டீலர் கமிஷன் ---2.௨7தமிழக அரசின் 'வாட்' -- 18.03--விற்பனை விலை - - 94.24-தமிழகத்தில், பெட்ரோலின் அடிப்படை விலை, சரக்கு கட்டணம், மத்திய அரசின் கலால் வரி ஆகிய மூன்றையும் சேர்த்தால், எவ்வளவு தொகை வருகிறதோ, அதில், ௧௩ சதவீத தொகையும், அத்துடன், ௧௧.௫௨ ரூபாயும் சேர்த்து, 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதேபோல, டீசலின் அடிப்படை விலை, சரக்கு கட்டணம், மத்திய அரசின் கலால் வரி ஆகியவற்றின் கூட்டு தொகை மீது, 11 சதவீதமும், அதனுடன், 9.62 ரூபாயும் சேர்த்து, மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்தில், பெட்ரோலின் அடிப்படை விலை, சரக்கு கட்டணம், மத்திய அரசின் கலால் வரி ஆகிய மூன்றையும் சேர்த்தால், எவ்வளவு தொகை வருகிறதோ, அதில் ௧௩ சதவீத தொகையும், அத்துடன் ௧௧.௫௨ ரூபாயும் சேர்த்து, 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதேபோல, டீசலின் அடிப்படை விலை, சரக்கு கட்டணம், மத்திய அரசின் கலால் வரி ஆகியவற்றின் கூட்டு தொகை மீது, 11 சதவீதமும், அதனுடன் 9.62 ரூபாயும் சேர்த்து, மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது.
.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE