43 வயது பெண் பலாத்காரம்; 'டிப்ளமா' மாணவர் கைது

Added : மே 22, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
அடையாறு : கணவரை இழந்த 43 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 'டிப்ளமா' மாணவனை, போலீசார் கைது செய்தனர்.அடையாறைச் சேர்ந்த 43 வயது பெண். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது கணவர் 2009ம் ஆண்டு இறந்தார். இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி பணி முடித்து வீட்டுக்கு சென்றார். அப்போது,
43 வயது பெண் பலாத்காரம்; 'டிப்ளமா' மாணவர் கைது

அடையாறு : கணவரை இழந்த 43 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 'டிப்ளமா' மாணவனை, போலீசார் கைது செய்தனர்.

அடையாறைச் சேர்ந்த 43 வயது பெண். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது கணவர் 2009ம் ஆண்டு இறந்தார். இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி பணி முடித்து வீட்டுக்கு சென்றார்.

அப்போது, பின்தொடர்ந்து வந்த நபர், வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சென்ற நபர்,'யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன்' என, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, அப்பெண் அவரது மூத்த மகளிடம் கூறி உள்ளார். பின், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மர்மநபரின் மொபைல் போனை வைத்து விசாரித்ததில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 'டிப்ளமா' மாணவர் என தெரிய வந்தது. நேற்று அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
26-மே-202213:25:14 IST Report Abuse
JaiRam பிச்சை போட்டவர்களை காட்டி கொடுக்கக்கூடாது
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
25-மே-202213:41:25 IST Report Abuse
Vivekanandan Mahalingam குற்றவாளியின் பெயரை ஏன் மறைக்க வேண்டும் ? இது எதற்காக செய்யப்படுகிறது ? யாரால் செய்யபடுகிறது ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-மே-202211:51:09 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பரா இருக்குன்னு வீடியோ மூஞ்சி பிரின்சிப்பாள் பெருமை பொங்க சொல்லுவான் பாருங்க. 200 ரூவா அல்லக்கைகள் உலகத்திலையே சிறப்பான ஆட்சியை தர்றான் இந்த பிரின்சிபாலுன்னு சொல்லி புளங்காகிதம் அடைவானுவோ பாருங்க நல்லா தமாஷா இருக்கும்.... குழந்தை முதல் கிழவி வரை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது தமிழகத்தில்.. தமிழர்கள் இந்த திருட்டு திராவிடர்களை ஒண்கொளுக்கே விரட்டும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X