'ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரம்; பின்னால் அமருவோரும் அணிவது கட்டாயம்

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை : இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என்ற திட்டம், இன்று முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரித்து வருகின்றனர்.latest tamil newsஆனால், 50 சதவீத வாகன ஓட்டிகள் கூட இதை கடைப்பிடிப்பது இல்லை.அப்படியே, ஹெல்மெட் வைத்திருந்தாலும் தலையில் அணிவது இல்லை. இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்வது மற்றும் டேங்கரில் வைத்து பயணிப்பதுமாக உள்ளனர்.சமீபத்தில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோரே அதிகமாக உயிரிழந்துள்ளனர்;


latest tamil newsஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'உயிரிழப்புகளை தடுக்கவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.'மறந்து வீட்டில் வைத்துவிட்டேன். இனி தான் வாங்க வேண்டும்' என, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, போக்குவரத்து விதிகளை மீற முயற்சி செய்ய வேண்டாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202221:46:52 IST Report Abuse
theruvasagan கொலை கொள்ளை சம்பவங்கள் அரசியல் வியாதிகள் அக்கபபோர் ரவுடிகள் அடாவடி மாணவர்கள் அட்டகாசம் இதுக்கெல்லாம் மென்மைான அணுகுமுறை. ஹெல்மெட்டுக்கு மாத்திரம் இரும்புக்கரம் கொண்டு அமல்படுத்துவது. இவைதான் டுமீல்நாடு சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் பெசல் ஐட்டங்கள்.
Rate this:
Cancel
23-மே-202216:25:36 IST Report Abuse
அப்புசாமி இனிமே பஸ்ஸுல போறவங்களும் ஹெல்மெட் போடணும்னு சொல்லிருங்க.நேருக்கு நேரா வந்து பஸ்களே மோதிக்கொள்கின்றன. அப்புறம் தெருவில் நடந்து போறவங்களும் ஹெல்மெட் போடணும்.சாலையோர டீக்கடையில் நின்னு டீ குடிச்சாலும் ஹெல்மெட் கட்டாயம்னு சொல்லணும்.ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் நல்லா மொய் எழுதுவாங்க.
Rate this:
Cancel
23-மே-202216:07:23 IST Report Abuse
ராஜா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக என்பதால் இதை வரவேற்கும் நேரத்தில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பிரதான சாலைகள் கூட தரமானதாக இல்லை, ஹெல்மெட் இன்மையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை விட தரமற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துக்கள் தான் அதிகம். மேலும், பல வாகனங்களில் விதிமுறைகளுக்கு எதிரான மாற்றங்கள் குறிப்பாக முகப்பு விளக்குகள், ஒலிப்பான்கள், Silencer கள் பொருத்தப்பட்டு அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. இன்னும் பல சாலைகளில் பலர் வலது புறத்தில் வந்து ஏற்படுத்தும் விபத்துக்களும் அதிகம். இது போன்ற குறைபாடுகளையும் அரசு சரி செய்தால் மட்டுமே விபத்துக்களை உண்மையான நோக்கதோடு கட்டுபடுத்த முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X