வரலாற்றில் குதிரைகளுக்கு முக்கிய இடம்: பிரதமர் மோடி

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி,-''நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் குதிரைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் ௨௦௦௩ல் 'விராட்' என்ற குதிரை சேர்க்கப்பட்டது.கவுரவிப்புமிக சிறப்பாக பணியாற்றிய விராட், ௧௩ குடியரசு தின பேரணியில் பங்கேற்றது. இந்த ஆண்டு நடந்த குடியரசு தின பேரணியுடன் பணியிலிருந்து விராட்

புதுடில்லி,-''நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் குதிரைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.



latest tamil news


ஜனாதிபதியின் மெய்க்காவல் படையில் ௨௦௦௩ல் 'விராட்' என்ற குதிரை சேர்க்கப்பட்டது.கவுரவிப்புமிக சிறப்பாக பணியாற்றிய விராட், ௧௩ குடியரசு தின பேரணியில் பங்கேற்றது. இந்த ஆண்டு நடந்த குடியரசு தின பேரணியுடன் பணியிலிருந்து விராட் ஓய்வு பெற்றது.குடியரசு தின பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, விராட் குதிரையின் முகத்தில் தட்டி விடைக் கொடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சோதி எழுதிய கடிதத்தில், 'விராட் குதிரையின் சேவையை பாராட்டி நீங்கள் கவுரவித்தது, குடியரசு தின பேரணியை மறக்க முடியாத நிகழ்வாக்கி விட்டது' என, குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



முக்கிய இடம்

இதற்கு பதில் அளித்து, அவருக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:நம் நாட்டின் பாரம்பரியமிக்க வரலாற்றிலும், கலாசாரத்திலும், குதிரைளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரை, சூரிய பகவான் ஓட்டி வருவதாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. முகலாயர்களை எதிர்த்து போராடிய மஹாராணா பிரதாப், சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமி பாய் ஆகியோருக்கும், குதிரைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு இருந்தது. நம் ராணுவத்திலும், குதிரைகள் மிக சிறப்பான சேவைகளை செய்து வருகின்றன.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
23-மே-202217:54:51 IST Report Abuse
தமிழன் மிளகாய் , கேரட் போல குதிரையும் நம் நாட்டிற்கு வந்தது என்பது தெரிந்தால் பிரதமர் இவ்ளோ எம்பி எம்பி பேசியிருக்கமாட்டார். என்ன செய்வது 25ம் புலிகேசியை???
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-மே-202216:21:28 IST Report Abuse
Sivagiri ஹோய் ஹோய் . . குதிரை ஓட்டுப்போடாது , . .
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
23-மே-202214:03:51 IST Report Abuse
Nellai tamilan பாரத நாட்டின் புராதனமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உண்மையான பிரதமர் நம் மோடி அவர்கள்
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
23-மே-202217:44:53 IST Report Abuse
தமிழன்குதிரை என்பதேநம் இந்தியாவின் விலங்கு அல்ல என்பது தெரியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X