இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்குகுவாட் மாநாடு உதவும்: பிரதமர் மோடி| Dinamalar

இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு'குவாட்' மாநாடு உதவும்: பிரதமர் மோடி

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
புதுடில்லி,-''இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு 'குவாட்' மாநாடு உதவும்,'' என, பிரதமர் மோடி கூறினார்.குவாட் அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை நடக்கிறது.இதில் பங்கேற்க ஜப்பானுக்கு நேற்றிரவு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் ௪௦

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-''இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு 'குவாட்' மாநாடு உதவும்,'' என, பிரதமர் மோடி கூறினார்.குவாட் அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.latest tamil news


இந்த அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை நடக்கிறது.இதில் பங்கேற்க ஜப்பானுக்கு நேற்றிரவு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் ௪௦ மணி நேரம் தங்கியிருக்கும் அவர், குவாட் மாநாடு உட்பட ௨௩ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஜப்பான் புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:குவாட் மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்களுடனும், அமெரிக்க அதிபருடனும் இரு தரப்பு பேச்சு நடத்த உள்ளேன். இதனால் அந்த நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தோ - பசிபிக் பிராந்தியந்தில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. இது பற்றி குவாட் மாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்படும். சர்வதேச பிரச்னைகள் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும். டில்லியில் கடந்த மார்ச்சில் இந்திய - ஜப்பான் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் கிஷிடா, குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்.

அதையேற்று ஜப்பான் செல்லும் நான், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேசுவேன்.ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோணி அல்பேன்ஸ்க்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news


'இந்தியாவின் அடையாளம் யோகா'

கர்நாடக மாநிலம் மைசூரை தலைமையிடமாக வைத்து, 'அவதுாத தத்தா பீடம்' என்ற அமைப்பை நடத்தி வருபவர் கணபதி சச்சிதானந்தா சுவாமிகள். இவரது ௮௦வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் உடையது. இந்த பாரம்பரியத்தை நாம் கட்டிக் காப்பதுடன், புதுமைக்கும், நவீனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். தற்போது இந்தியாவின் அடையாளம் யோகா மற்றும் இளைஞர் என கூறலாம். நம் வலிமையை உலகமே இன்று பார்க்கிறது.இவ்வாறு பிரதமர் பேசினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X