மொய் விருந்து நடத்தி இலங்கை மக்களுக்கு நிதி

Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுக்கோட்டை: இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, புதுக்கோட்டை அருகே, கேப்பறையில் உள்ள டீ கடையில் நேற்று மொய் விருந்து நடத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, வம்பன் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 46. அதே பகுதியில், டீக்கடை நடத்துகிறார். கடந்த 2018-ல், 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தன் கடையில், வாடிக்கையாளர்கள்
மொய் விருந்து நடத்தி இலங்கை மக்களுக்கு நிதி

புதுக்கோட்டை: இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, புதுக்கோட்டை அருகே, கேப்பறையில் உள்ள டீ கடையில் நேற்று மொய் விருந்து நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, வம்பன் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 46. அதே பகுதியில், டீக்கடை நடத்துகிறார். கடந்த 2018-ல், 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தன் கடையில், வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீ, பலகாரத்துக்கான பாக்கி தொகை, 30 ஆயிரம் ரூபாயை தள்ளுபடி செய்தார். கொரோனா பரவலின் போது, பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக, தனது டீ கடையில் மொய் விருந்து நடத்தி, வாடிக்கையாளர்களுக்கு டீ, பலகாரம் இலவசமாக வழங்கினார்.

அதன் மூலம் கிடைத்த, 20 ஆயிரம் ரூபாயை, மாவட்ட கலெக்டர் வாயிலாக, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக, கேப்பறையில் அவர் சமீபத்தில் துவங்கிய டீ கடையில், நேற்று மொய் விருந்து நடத்தினார். இங்கு, மொய் செய்தோருக்கு டீ, வடை, போண்டா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த டீ கடையில் டீ குடிக்க வந்தோரிடம் பணம் ஏதும் வாங்காமல், அவர்களாக இஷ்டப்பட்டு தரும் கூடுதல் பணத்தை, மொய் விருந்து உண்டியலில் சேர்த்தார்.

இது குறித்து, சிவக்குமார் கூறியதாவது: பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக, கேப்பறை டீ கடையில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து, இரவு 7:00 மணி வரை மொய் விருந்து நடத்தினேன். கிடைத்துள்ள பணத்தை, மாவட்ட கலெக்டர் வாயிலாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
24-மே-202217:04:21 IST Report Abuse
sankar இப்ப மோடி அரசு செய்துவரும் உதவிகள் மட்டுமே நேரடியாக இலங்கைக்கு கிடைக்கும் - அவர்களை வாழவைக்கும் - மோடி எதை செய்தாலும் பதிலுக்கு எதையாவது செய்வது என்பது விடியலின் வாடிக்கை - உக்ரைன் காமெடி போல
Rate this:
Cancel
23-மே-202223:13:44 IST Report Abuse
Vishnu Kumar மிகவும் நல்ல செய்தி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202222:28:01 IST Report Abuse
Girija நாங்க இதெல்லாம் சிவகார்த்திகேயன் படத்தில பார்த்திட்டோம்னா? எப்படி சுருட்டுவீங்கன்னு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X