நெத்தியடி! மாநிலங்களின் வருவாய் குறையாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி,-''பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு குறையாது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட கூறியுள்ளார். முந்தைய ஆட்சியுடன் ஒப்பிட்டு இதற்கு தெளிவான பதிலளித்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவர் முறியடித்துள்ளார்.சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் நம் நாட்டில் பல்வேறு பொருட்களின்

புதுடில்லி,-''பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு குறையாது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட கூறியுள்ளார்.latest tamil newsமுந்தைய ஆட்சியுடன் ஒப்பிட்டு இதற்கு தெளிவான பதிலளித்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவர் முறியடித்துள்ளார்.சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் நம் நாட்டில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து, விலைவாசி அதிகரித்து உள்ளது.இதைக் கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையிலும், பெட்ரோல், டீசலுக்கான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், '1 லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 8 ரூபாயும், டீசலுக்கான விலை 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது.இதனால், இவற்றின் விலை முறையே, 9.50 ரூபாய் மற்றும் 7 ரூபாய் குறையும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.வலியுறுத்தல்மேலும், 'மாநில அரசுகளும், 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியைக் குறைக்க முன்வர வேண்டும்.'கடந்த 2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்த போதும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்கள் குறைக்கவில்லை.

தற்போது விலையை குறைக்க அவை முன்வர வேண்டும்' என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம், கடும் விமர்சனத்தை முன் வைத்தார். 'பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும்' என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தக் கருத்தை அவர் நேற்று திரும்பப் பெற்றார்.

'பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பு, மத்திய அரசின் பொறுப்பு என்பதை மத்திய நிதி அமைச்சரே கூறியுள்ளார். 'அதனால், என் கருத்தை திருத்திக் கொள்கிறேன்' என, அவர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.கடந்த 2014ல் பா.ஜ., அரசு அமைந்ததற்கு முன் இருந்த வரிகளையே தொடர வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் கூறியிருந்தன.

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் உட்பட பல மாநிலத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பகிர்ந்தளிப்புஇவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக பல விமர்சனங்கள், கேள்விகளை பலர் முன் வைத்துள்ளனர். அவர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும், இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு வரிகளை விதிக்கிறது. அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி, வேளாண் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கூடுதல் வரி ஆகியவை அடங்கியதே கலால் வரி.இதில், அடிப்படை கலால் வரி வருவாய் மட்டுமே மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அதாவது அடிப்படை கலால் வரி வருவாயில், 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.கடந்த 2021 நவம்பரில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. தற்போது, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவை, முழுக்க முழுக்க சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரியில் இருந்து செய்யப்பட்டுள்ளது.அடிப்படை கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இதனால், மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையாது. கடந்த 2021 நவ., மற்றும் தற்போது செய்யப்பட்டுள்ள வரி குறைப்பால் ஏற்படும் மொத்த சுமையை மத்திய அரசே ஏற்கிறது.13.9 லட்சம் கோடி ரூபாய்தற்போதைய வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதே போல், 2021 நவ., விலை குறைப்பால், ஆண்டுக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆக மொத்தம், 2.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மத்திய அரசு ஏற்கிறது.பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி மூலம் கிடைக்கும் நிதி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுகிறது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின், 2014ல் இருந்து, 2022 வரை, 90.9 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது, 2004 - 2014 காலகட்டத்தில், 49.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த அரசு செலவிட்ட தொகையில் 24.85 லட்சம் கோடி ரூபாய், உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கான மானியமும் அடங்கும். அதே நேரத்தில் முந்தைய ஆட்சியில், 10 ஆண்டுகளில் 13.9 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


ராஜஸ்தான், கேரளாவில் 'வாட்' குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து, அதன் மீதான, 'வாட்' வரியை குறைப்பதாக ராஜஸ்தான், கேரளா, மஹாராஷ்டிரா அரசுகள் அறிவித்துள்ளன.பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகளும் குறைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைப்பதாக நேற்று அறிவித்தார்.'பெட்ரோல் மீதான வரி, 2.48 ரூபாயும், டீசல் மீதான வரி, 1.16 ரூபாயும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள விலை குறைப்புடன் சேர்க்கையில், பெட்ரோலுக்கு, 10.48 ரூபாயும், டீசலுக்கு, 7.16 ரூபாயும் குறையும்' என, சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ள கேரளாவும், விலை குறைப்பை அறிவித்துள்ளது. அங்கு ௧ லிட்டர் பெட்ரோலுக்கான வாட் வரி, 2.41 ரூபாயும், டீசல் மீதான வரி, 1.36 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவிலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் பெட்ரோலுக்கான வரி, 2.08 ரூபாயும், டீசலுக்கான வரி, 1.44 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும் ஒடிசா மாநில அரசும், பெட்ரோலுக்கான வாட் வரியை, 1 லிட்டருக்கு 2.04 ரூபாயும், டீசலுக்கான வரியை 1.44 ரூபாயும் குறைத்துள்ளது.

.


Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-மே-202221:42:40 IST Report Abuse
Girija என்னவோ விளையாட்டு சிலம்பம் உதவி என்று சீன் போடுகிண்றீங்களே ? கோடை விடுமுறைன் போது அவர்களை ஊக்குவிக்க ரேஷனில் நவதானியா பொருட்களை மலிவு விலையில் தர நடவடிக்கை எடுத்தீர்களா ? இன்று ஒரு வீரர் விளையாட்டில் சாதித்து மெடலோடு வருகிறார் என்றால் காமராஜர் விதைத்த மத்திய உணவு திட்டம் , இலவச கல்வி , பின்னாளில் எம் ஜி ஆர் ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது . நீங்க ஒரு வருடத்தில் என்ன செஞ்சீங்க? இப்போதான் பள்ளிகள் மூடும் போது காலை உணவு தரப்பப்டும் என்று மிகவும் நகைப்புக்கு உரிய அறிவிப்பை செய்துள் ளீர்கள் . அரசு பள்ளியில் படிக்கும் சிறார்கள் மேட்டுக்குடி மக்களா? எழுந்தவுடனுன் வசதியாக பாத்ரூமில் குளித்து, தயாராக உள்ள உடையை அணிந்து, காரில் வர ? ஒரே குடும்பத்தில் இரண்டு சிறார்கள் இருந்து தந்தையும் தாயும் வேலைக்கு போகும் நிலையில் அவர்கள் எப்படி காலை சிற்றுண்டியை உன்ன முடியும் ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202220:55:32 IST Report Abuse
Girija என்ன நம்ப பெரிய தம்பி ப சி பேரறிவாளன் விடுதலைக்கும் வாயை திறக்கலை , பெட்ரோல் விலை குறைப்புக்கும் வாயை திறக்கலை, தாத்தா மன்மோகன் சிங் ஊரில் இல்லையாம்? மூன்று முறை பட்ஜெட் போட்டு எங்கெல்லாம் பீ ராயலாம் என்பதை மட்டும் தான் நன்கு அறிந்த அமெரிக்க ஹாவொர்ட் யூனிவர்சிட்டி படித்த மேதை. அழகிரி சுத்தம் தான் அதிகம் கேட்குது ? சீனர்கள் விசா விஷயத்தில் ஜாமீனுக்கு சுப்ரீம் கோர்ட் தயவு தேவை என்பதால் அடக்கி வாசி (பா சி ) க்கும் சிதம்பரம் . யா சி .............பெயிலுக்கு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202220:13:47 IST Report Abuse
Girija நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் என்றதும் எல்லோரையும் போல் எனக்கும் ஒரு தயக்கம் கிண்டல் கேலி எழுந்தது , அடடட எட்ட முடியாத சிகரத்திற்கே போய்விட்டார் நிதி நிர்வாகத்தில். கொரோனா காலத்தில் நிதி மேலாண்மை, நிவாரணம் , வாங்கி கடன் சீரமைப்பு, இபிஎப் சலுகை , பிற துறையுடன் இணைந்து கொரோன காலத்தில், இலவச தடுப்பு ஊசி , மருத்துவ சிகைச்சை, ரேஷன் என்று மோடி வழங்க உறுதுணையாக நின்றார் . இப்பொழுது ஜி எஸ் டி யையும் சீரமைத்து வருகிறார். பி ஜெ பி அல்லாத மாநிலங்கள் ஜி எஸ் டி பற்றி சொல்லும் புளுகு மூட்டைகளை தெறிக்க விடுகின்றார், தவறுகளை உடனுக்குடன் சரி செய்கின்றார். இன்று பதவி ஏற்று ஒரு வருடம் முடிவதற்குள், தொழில் வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று மார்தட்டும் ஸ்டாலின், இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று தெரிந்திருந்தால் அதை பற்றியே வாயை திறந்திருக்கமாட்டார். கொரோன பாதிப்பு இருந்த போதும் மத்திய அரசின் நிதி மேலாண்மையால் தான் இது நடந்தது , அதில் அதிமுகவிற்கு பங்குள்ளது ஆனால் திமுகவிற்கு பங்களிப்பே கிடையாது. அப்படி இருக்கையில் தவறான நிதி வழி காட்டியினால் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார். இதற்கு சாட்சி வெள்ளை அறிக்கை, அதன் படி பத்து ஆண்டுகள் எதுவும் நடக்கவில்லை, ஆனால் இன்று எதாவது பரிசு கொடுத்தால் பல்லை காட்டுவது வெட்க கேடானது. Hats off to Nirmala FM. ஒன்றிய அரசு என்று கூறுவதால் மத்திய அரசுக்கு ஒரு பாதகமும் இல்லை. ஆங்கில அரசு , ரஷ்ய அரசு என்று சொன்னால்தான் கும்பாபிஷேகம் நடக்கும்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
23-மே-202220:46:16 IST Report Abuse
Girijaகொரோனா லாஃடவுன் இரண்டு வருட கால கட்டத்தில், மக்களை மாநில, ஒன்றிய அரசுக்கு எதிராக தூண்டிவிடும் வேலையைத்தான் செய்தார்கள், மாத சம்பளம் தர வேண்டும், மருத்துவ சிகைச்சை தரவேண்டும், வீட்டு கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்ய்யவேண்டும், ரேஷனில் எல்லா மளிகை பொருட்களையும் இலவசமாக தரவேண்டும், கொரோன நிவாரண நிதி தரவேண்டும், லாக் டவுனில் வெளிய சுற்றியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு, கொரோன மரணத்தை மாநில மற்றும் ஒன்றிய அரசு மறைக்கிறது, நாங்கள் நிவாரணம் வழங்குவோம் அப்படி இப்படி என்று அத்தனை இடையூறுகளை செய்துவிட்டு, இன்று லாஃடவுன் முடிந்தவுடன் ஆட்சிக்கு வந்துவிட்டு, ஒரு வருடத்திற்குள் , தமிழகம் தொழில் வளர்ச்சியில் இரண்டாவது இடம் எங்கள் சாதனை எனபது வேதனை. குழந்தை பிறப்புக்கே பாத்து மாதம் என்கிறபோது . கொரோன காலத்தில் இலவச சிகச்சையும் தரப்பட்டது, இறந்தவர் குடும்பங்களுக்கு நிவாரணமும் இன்று தரப்படுகிறது இது எந்த முன்னேறிய நாட்டிலும் இல்லை. பிரான்சில் கொரோன நோயாளிகளை இடம் இல்லை என்று விரட்டி அடித்து கொன்றனர் ஆனால் எதோ ஒருஇடத்தில் 130 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகள் மரணம் என்று காங்கிரஸுடன் குதிதீர்கள், இன்று ராகுல் சொல்ல்கிறார் இந்தியாவில் கோர்னோன மரணம் அதிகம் என்று வெளிநாட்டில் கூறி தன மீதே சேற்றை வாரி பூசிக்கொள்கிறார், அங்குள்ளவர்கள் நல்லவேளை நீ என்னையா மக்களுக்கு செய்தாய் என்று கேட்கவில்லை. கேட்டிருந்தால் ரகசிய வெளிநாட்டு பயணங்கள் அமபலத்திற்கு வந்திருக்கும். 2018 - 2022 கால கட்டத்தில் ராகுல் மட்டும் பிரதமராக இருந்தால் இந்தியா எத்தியோப்பியா வாகி, ஜனத்தொகை 60 கோடியாக குறைந்திருக்கும். நல்ல வேளை நாம் புண்ணியம் செய்தோம்....
Rate this:
Girija - Chennai,இந்தியா
23-மே-202222:00:12 IST Report Abuse
Girijaசொல்ல விட்டு போய்விட்டது , வந்தே பரத் விமானங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை இலவசமா அழைத்தவர, இந்தியாவிலேயே உலக தரம் வாய்ந்த கொரோனா தடுப்பு ஊசிகள் தயாரித்து , அதை ஏழை வெளிநாடுகளுக்கும் இலவசமாக அனுப்பியது இந்த அரசு . பிரேசில் அதிபர், மோடியை அனுமார் சஞ்ஜீவி மலையை எங்களுக்கு தந்தார் என்று பொது வழியில் பதிவிட்டுள்ளார். இந்த நாட்டுக்காரராகள் எல்லோரும் ஹிந்துவா? ஹிந்துத்வா வெறியர் என்று மோடியை வர்ணிக்கும் இந்த திராவிட கூட்டம் எங்கே?, அவர்கள் எங்கே ?. இந்திய குடியுரிமை யாருக்கு தர நிபந்தனைகள் விதித்தது மோடி அரசு ? தீவிரவாத நாடு பிரஜைகளுக்கு. இன்று நம் எல்லையை , திருவண்ணாமலை யிலிருந்து , ராமநாதபுரத்தில் இருந்தும் பாதுகாக்கும் நம் வீரர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவே இந்த கட்டுப்பாடு . நடு ரோட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டு எதிரப்பு தெரிவித்த கோஷ்டியிடன் கும்மி அடித்தது யார் ? அந்த பிரியாணி கோஷ்டியின் அண்ணனோ தம்பியோ அப்பாவோ அல்லது அம்மாவோ பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரவா தடை செய்தது ? உனக்கு அவனையும் தெரியாது , பாஷையும் தெரியாது அவன் எதற்கு இந்திய குடியுரிமை பெறவேண்டும்? அதேபோல் வேளாண் சட்டம், மூன்று மாதத்திற்கு முன்பு சென்னையில் தக்காளி கிலோ பத்து ருபாய் , விவசாயிகள் பெரும்பாலோர் தக்காளியை தெருவில் கொட்டினர் , இன்று தக்காளி கிலோ நூறு ருபாய் , வாங்க ஆள் இல்லை? யாருக்கு நஷ்டம்? விவசாயி பெறுவது என்னோவோ அதிகபட்சம் கிலோவிற்கு 20 ஆனால் இடையில் கொள்ளைஅடிபப்து யார் ? புரிஞ்சவங்களுக்கு சொன்னாலும் பிரயோஜனம் இல்ல , புரியாதவங்களுக்கு சொன்னாலும் பிரயோஜனம் இல்ல ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X