விருத்தாசலம் : ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயமின் மோட்டார் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.விருத்தாசலம் நகர தி.மு.க.,மற்றும் நகர இளைஞரணி சார்பில்,தமிழகஅரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வானொலி திடலில் நடந்தது.நகர செயலர் தண்டபணி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலர் அரங்க பாலகிருஷ்ணன், மாவட்ட ஆதி திராவிட நலக் குழு அமைப்பாளர் ராமு, நகர பொருளாளர் மணிகண்டன், துணைசெயலர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், சரவணன், பழனிசாமி, குமார் தளபதி, மணிவண்ணன், அன்சார் அலி முன்னிலை வகித்தனர்.மாநில மாணவரணி பொதுச் செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நெல்லை மணி, விருத்தாசலம் சேர்மன் சங்கவி முருகதாஸ் பங்கேற்று பேசினர்.
ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில்,'பத்து ஆண்டு சாதனைகளை ஓராண்டில் தி.மு.க, செய்துள்ளது. மகளிர் இலவச பேருந்து திட்டம், மக்களைதேடி மருத்துவம், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மோட்டார் மின் இணைப்பு, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.வரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில், தமிழகத்தை முதல் மாநிலமாக தி.மு.க, ஆட்சி மாற்றும்' என்றார்.இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE