சாலை, பாலப்பணி தரம் குறித்து ஆய்வுக்கு...'ஸ்பெஷல் டீம்!';  நெடுஞ்சாலை துறையில் அதிரடி நடவடிக்கை

Added : மே 23, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கடம்பத்துார் : நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மற்றும் பாலப் பணிகளின் தரத்தை உறுதி செய்ய 22 பேர் அடங்கிய, 'உள் தணிக்கை' குழுவினர், தமிழகம் முழுதும் ஆய்வு செய்து வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள், பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய 'உள் தணிக்கை' என்ற புதுதிட்டம்அறிமுகப்படுத்தப்படும் என,

கடம்பத்துார் : நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மற்றும் பாலப் பணிகளின் தரத்தை உறுதி செய்ய 22 பேர் அடங்கிய, 'உள் தணிக்கை' குழுவினர், தமிழகம் முழுதும் ஆய்வு செய்து வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகள், பாலப்பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய 'உள் தணிக்கை' என்ற புதுதிட்டம்அறிமுகப்படுத்தப்படும் என, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, கடந்த மாதம் 22ம் தேதி தெரிவித்தார்.latest tamil news
இது குறித்த அரசாணை 29ம் தேதி வெளியிட்டது. தமிழகம் முழுதும் உள்ள, நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள் மற்றும் பாலப்பணிகளின் தரத்தை உறுதி செய்வதும், திட்டமிட்டப்படி முறையாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதும், இந்த 22 பேர் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பணியாகும்.இத்திட்டத்தின்படி, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டுமான மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் மாநில அரசு நிதியில் செயல்படும் பணிகள் மற்றும் சென்னை பெருநகர திட்ட அலகுகளில் நடந்து வரும் பணிகளை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.அந்த வரிசையில், திருவள்ளூர் அடுத்த, புட்லுார் பகுதியில், கடவுப்பாதை 16ல், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும்.காக்களூர் - புட்லுார் இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாயில், 620 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டுமான பணியை, உள் தணிக்கை திட்டக் குழுவினர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.இங்கு, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், இரண்டு துாண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், நெடுஞ்சாலை துறை பகுதியில், 14 துாண்கள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வந்த நிலையில் மின் கம்பங்களால் பணிகள் தாமதமாயின.

தற்போது, மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, மேம்பால பணிகள் விரைவில் போக்குவரத்து துவங்கும் வகையில், துரித வேகத்தில் நடக்கின்றன.நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சென்னை வட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர்ப.செந்தில் ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ம.சத்தியசீலன் மற்றும் நான்கு உதவி கோட்டப்பொறியாளர்கள், எட்டு உதவிப் பொறியாளர்கள் அடங்கிய உள் தணிக்கை குழுவினர் பார்வையிட்டு, பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர்.

இதேபோல் பட்டாபிராம் பகுதியில், கடவுப்பாதை எண்., 2ல் நடந்து வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், திருவாலங்காடு பகுதியில் நடந்து வரும் சாலை, மேம்பால பணிகள் உட்பட தமிழகத்தில் நடந்து வரும் சாலைப் பணிகளை ஆயவு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என, உள் தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் டில்லிபாபு உட்பட நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
23-மே-202216:56:55 IST Report Abuse
Rengaraj நெடுஞ்சாலை துறை ரோட்டின் இருபுறமும் பதினைந்து அடிக்கு மேல் தான் ஓட்டல்களோ, கடைகளோ இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதை இந்த உள்துறை தணிக்கை குழு கவனிக்குமா ? மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் சாலையின் இருபுறமும் கடைகள், வண்டிகள், ஆக்கிரமிப்புகள் சர்வீஸ் ரோட்டை தாண்டி அமைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை செல்லும் இடங்களில் ரோட்டை ஒட்டி இருபுறமும் கடைகள் இருப்பின் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் ரோட்டின் விளிம்பில் ஆரம்பித்து கடைகளின் விளம்பர பதாகைகள் உள்ளன. இதையும் அந்த குழு கவனிக்க வேண்டும்.ரோட்டின் தரம் மட்டும் பார்த்தல் பத்தாது. அதே போன்று அந்த ரோட்டை போட்ட காண்ட்ராக்டர் பெயர் , காண்ட்ராக்ட் தொகை, ரோட்டின் மேம்பாட்டு பணிகள் ஆரம்பித்த ஆண்டு, முடித்த ஆண்டு இவை அனைத்தும் முக்கியமான இடங்களில் மக்களுக்கு தெரியுமாறு இருக்க வேண்டும். மக்கள் பணம் தானே? . எவ்வளவு கோடி அல்லது லட்சங்கள் செலவழித்து இந்த ரோடு மேம்படுத்தப்பட்டது அல்லது புதிதாக போடப்பட்டது என்று மக்களுக்கு தெரிவதில் தப்பு ஒன்றும் இல்லையே ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
23-மே-202213:40:27 IST Report Abuse
r.sundaram முதலில் பழைய சாலைகளை எடுத்து விட்டு, புதியசாலை போடப்பட வேண்டும். இதை முதன்மை செயலர் தான் பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே சுற்றறிக்கை மூலம் சொல்லி இருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரிய வில்லை. சாலையின் மட்டம் உயரும்போது அதனால் வேறுபல கெடுதல்கள் நேருகின்றன. (1)பாதாள சாக்கடையில் சாலையின்மேல் அமைக்கப்படும் திறப்புகள், சாலையில் குழிகளாக மாறி விடுகின்றன. இரவில் சாலையில் போகும்போது இவை மரணக்குழிகளாக மாறுகின்றன. (2) அஸ்திவாரம் அதிக உயரம் இல்லாத வீடுகளுக்குள் மழை தண்ணீர் ஏறுகிறது. (3) சாலைக்கும் அதை அடுத்து இருக்கும் மணல் பரப்புக்கும் ஏற்ற இரக்கம் ஏற்பட்டு சாலை பயணமே ஆபத்தாக மாறுகிறது. (4) பெரிய வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனங்களால் ஒதுங்க முடிவதில்லை. ஆனால் இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிசன் வந்தால் போதும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
23-மே-202213:25:48 IST Report Abuse
r.sundaram ஸ்பெஷல் டீம்முக்கு ஸ்பெஷல் கையூட்டு, முடிந்தது வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X