நெய்வேலி : 'என்.எல்.சி., நிறுவனம் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது அனைத்து பணியாளர்களும் துணை நிற்பது பாராட்டுக்குரியது என, சேர்மன் ராகேஷ்குமார் பேசினார்.என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் 66வது உதயமான தினம் கொண்டாடப்பட்டது. என்.எல்.சி., ஒற்றாடல் துறையின் முதன்மை கண்காணிப்புத்துறை அதிகாரி சந்திரசேகர் தலைமை தாங்கினார். என்.எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் மோகன் ரெட்டி, நிதித்துறை இயக்குநர் ஜெய்குமார் ஸ்ரீநிவாசன், மின்துறை இயக்குநர் ஷாஜிஜான், சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் முன்னிலை வகித்தனர்.
மனிதவளத்துறை செயல் இயக்குநர் சதீஷ்பாபு வரவேற்றார்.அந்நிறுவனத்தின் முன்னாள் சேர்மன்கள் நாராயணன், ஏ.கே.சகாய், ஜெயராமன், பிரசன்னகுமார், சரத்குமார் ஆச்சார்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சேர்மன் ராக்கேஷ்குமார் பேசுகையில், 'சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடங்கி நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் அனைவரும், தங்கள் கடின உழைப்பின் மூலம் நிறுவனத்திற்கு ஆற்றி வரும் பணிக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.என்.எல்.சி., நிறுவனம் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது அனைத்து பணியா ளர்களும் அதனை ஒருங்கினைந்து எதிர்கொள்ளத் துணை நிற்பது பாராட்டுக் குரியது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனப் பணியாளர்கள், எவ்விதமான சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் திறமை வாய்ந்தவர்கள் என்றார்.என்.எல்.சி., செயல் இயக்குநர் மோகன், முதன்மை பொதுமேலாளர்கள் ஜோ ஸ்டீபன் டோமினிக், குருசாமிநாதன், சத்தியமூர்த்தி, சத்திய பிரசாத் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மனிவளத்துறை முதன்மை பொதுமேலாளர் தியாகராஜூ நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE