புதிய சினிமா தொழில்நுட்பம் வேண்டுமா?உலக நாடுகளுக்கு அமைச்சர் அழைப்பு!

Added : மே 23, 2022 | |
Advertisement
கேன்ஸ்-'சினிமா துறையின் புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக இந்தியா உள்ளது; இதை உலக சினிமா துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு 'சிறப்புமிக்க சிறப்பு அழைப்பாளராக' நம் நாட்டுக்கு
புதிய சினிமா தொழில்நுட்பம் வேண்டுமா?உலக நாடுகளுக்கு அமைச்சர் அழைப்பு!

கேன்ஸ்-'சினிமா துறையின் புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக இந்தியா உள்ளது; இதை உலக சினிமா துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு 'சிறப்புமிக்க சிறப்பு அழைப்பாளராக' நம் நாட்டுக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. சேவைபா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தியக் குழு இந்த விழாவில் பங்கேற்கிறது.திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, சினிமா துறை வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

இதில், நம் நாட்டைச் சேர்ந்த, ஐந்து 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.பலமொழிகளில் மொழி பெயர்த்து, 'சப் - டைட்டில்' எனப்படும் வசனங்களை எழுத்து வடிவில் வழங்குவது உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வரும், ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தங்களுடைய சேவைகள் குறித்து விளக்கின.

இதைத் தொடர்ந்து, இணையமைச்சர் முருகன் பேசியதாவது:'ஆடியோ விஷுவல்' எனப்படும், சினிமா ஒலி, ஒளி வடிவமைப்பு தொழில்நுட்பம் உட்பட, பல நவீன தொழில்நுட்பங்களில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது.புதிய தொழில்நுட்பம்சினிமாவில் நடிப்பவரின் வாய் அசைவுக்கு ஏற்ப, எந்த மொழியிலும் அதை மொழிபெயர்க்கக் கூடிய தொழில்நுட்பத்திலும் இந்தியா வலுவாக உள்ளது.ஆண்டுக்கு, 2,000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரித்து, உலக சினிமாவின் தொழிற்சாலையாக இந்தியா விளங்குகிறது. புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X