தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை; 26ல் துவக்குகிறார் மோடி

Updated : மே 23, 2022 | Added : மே 23, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை-தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 386 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை -

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.



latest tamil news



தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 386 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


மதுரை - போடிநாயக்கனுார் இடையே, 450 கோடி ரூபாய் செலவில், 98 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மதுரை - தேனி வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 26ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை துவக்கி வைக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVIKUMAR - chennai,இந்தியா
23-மே-202216:01:38 IST Report Abuse
RAVIKUMAR இதுல ஏற்கனவே ரயிலை ஒட்டியாச்சி ...இப்போ மறுபடியும் திறக்கணுமா ?.. அதுல ஒரு விஷயம் பாருங்க ..பரனுர் பாலத்துக்கு கீழ சுவர் ரொம்ப கிட்ட வரும் ...ட்ரைன்ல உக்காந்து கொன்சம் எட்டி கைய நீட்டின படும் ...ரயில ரொம்ப ரொம்ப ஸ்லோவா உருட்டிக்கிட்டு போகணும் ...இந்த கருமத்தான் இதனை வருஷமா சிற்பி மாதிரி செதுக்கி செதுக்கி செய்ஞ்சானுங்க ...இந்த பாதையில் புறநகர் ரயில் பயணிகளை மதிப்பதே இல்ல ..எஸ்பிரெஸ்ஸுக்கும் கூட்ஸ் ரயிலுக்கு தான் முன்னுரிமை ...பயணிகள் படும் பாடு எவனுக்கும் தெரியாது
Rate this:
Cancel
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
23-மே-202215:14:41 IST Report Abuse
T.SRINIVASAN தாம்பரம் செங்கல்பட்டு மூன்றாம் இருப்புப்பாதை அமைக்கப்பட்டு இப்போது ஒரு சில ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. இந்த திறப்பு விழாவிற்கு பிறகு அனைத்து ரயில்களும் புதிய பாதையில் இயக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் பயண நேரம் குறையும். தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில் அறிமுகம் செய்யலாம்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
23-மே-202214:10:13 IST Report Abuse
பாமரன் ஆக்சுவலா இந்த ரெண்டு திட்டமும் பற்றி சொல்லனும்னா நான் குழந்தையா இருந்தப்போ பாட்டி பாரக்ஸ் ஊட்டுறப்போ சொல்லிகிட்டே ஏமாத்தி ஊட்டுவாங்க... அப்பாலிக்கா நான் வளர்ந்து வேலைக்கு போயி அந்த பாதையிலே டிராவல் பண்ணி இப்போ ஹைப்பர்லூப் பற்றியெல்லாம் பேசிகிட்டு இருக்குறப்போ🤣 திடீர்னு திறக்க போறதா சொல்றாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X