சாலைகளில் திரியும் கால்நடைகள் உரிமையாளர்களுக்கு அபராதம்

Added : மே 23, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 31,509 ரூபாய் அபராதம்



புதுச்சேரி,-உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 31,509 ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. பின், மாடுகளை இனிமேல் சாலைகளில் திரிய விடமாட்டோம் என உறுதிமொழி பெறப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், 'இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போர், அவற்றை தங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டிவைத்து சுகாதாரமான முறையில் வளர்க்க வேண்டும் என, தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X