வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.15 ஆயிரம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.10 ஆயிரம் கேட்டு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பிரசவத்திற்காக வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடன் வருபவர்களிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏழ்மையில் இருப்பவர்களே அதிகம். அவர்களிடமும் குழந்தை பிறந்தததும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் கேட்டு அவர்களின் மனதை நோகடிக்கின்றனர். பணம் கேட்டு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பணம் வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
லஞ்சம் கேட்குறாங்க
சரவணன், பா.ஜ., நிர்வாகி, வத்தலக்குண்டு: அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்றால் அதிகமாக பணம் கேட்கின்றனர். மருத்துவமனையில் நடக்கும் கொடுமைகளைக் களைய வேண்டும். பணம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்நிலை ஊழியர்கள் லஞ்சம் பெற்று அரசு மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
நடவடிக்கை தேவை
சண்முகம், பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர், செக்காபட்டி: அரசு மருத்துவமனையை கிராமத்தினர் தான் நாடி வருகின்றனர் அவர்களிடம் பணம் கட்டாயப்படுத்தி வாங்குவது கொடுஞ்செயலாகும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும்.
இறக்கம் இல்லை
கோபி, விவசாயி, சீத்தாபுரம்: சில நாட்களுக்கு முன்பு எனது உறவினரிடம் பிரசவம் பார்க்க பணம் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். அவர்களிடம் இல்லாமல் நான் அவர்களுக்கு உதவி செய்தேன். இறக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர் இல்லை
ஜான், சமூக ஆர்வலர், சின்னுபட்டி: அரசு மருத்துவமனையில் உள்ளவர்கள் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பணம் எதிர்பார்த்தால் வறுமையில் உள்ளவர்கள் எங்கே செல்வர். மருத்துவர்கள் பணியிடமும் காலியாக உள்ளன. அவற்றையும் நிரப்ப வேண்டும். மருத்துவமனைக்கு வருவோரிடம் அன்பாக பேசினாலே அவர்கள் நோய் விரைவில் குணமடையும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE