பழநி:பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் 20 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இக்கல்லுாரியில் 1990-93 வரை வணிகவியல் துறையில் படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று சந்தித்தனர். இவர்களில் பலர் அரசு, தனியார் துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடைய பேராசிரியர்களை கவுரவிக்கும் விதமாக நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை தணிகாசலம், சங்கர், சந்திரசேகர், மணிகண்டன், தங்கமணி செய்தனர்.
நெய்க்காரபட்டி
கோரிக்கடவு சி.ஜீ.எம்., பள்ளியில் 1970--71 ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு, பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சின்ன கலையமுத்துாரில் நேற்று நடந்தது. அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை மனோகரன், அருள் துரை, கலை அரசன், கனகராஜ், சரவணபவன், விஜயலட்சுமி, ராஜமோகன், செல்லம், ஜோதிமணி, பழனியம்மாள், தங்கராஜ், அருணாச்சலம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE