பெண் தற்கொலை: நால்வர் மீது வழக்கு
வடமதுரை: வடமதுரை அத்திக்குளத்துபட்டியை சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் கண்ணன். இவரது மனைவி உமாராணி 37. குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு வீட்டின் அருகே செல்லும் ரயில் பாதையில் விழுந்து தற்கொலை செய்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணன், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததால் மனமுடைந்து உமாராணி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கண்ணன், அவரது தந்தை திருப்பதி, தம்பிகள் நாகராஜ், பாண்டி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வேன் கவிழ்ந்து நால்வர் காயம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.ஆற்காட்டை சேர்ந்த 12 பேர் அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். நேற்று மதுரையில் இருந்து பழநிக்கு சென்றனர். ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் பழனி கவுண்டன்புதுார் அருகே வேன் சென்றபோது டூவீலரில் சென்றவர் ரோட்டை கடக்க முயன்றார். உடனே வேன் டிரைவர் கோவிந்தராஜ் பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறி வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஹேமலதா 50, கற்பகம் 78, பொம்மை 71, ரக்ஷனா 5, ஆகியோர் காயமடைந்தனர்.
வாலிபர் கைது
வேடசந்துார்: கிரியும்பட்டியை சேர்ந்த ஜீவா 19. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னப்பொண்ணு 45, துாங்கிக்கொண்டு இருந்துள்ளார். அங்கு சென்ற ஜீவா, சின்னப்பொண்ணுவின் சேலையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். வேடசந்துார் போலீசார் ஜீவாவை கைது செய்தனர்.
ஒருவர் பலி
கீரனுார்: பழநி பழைய தாராபுரம் ரோட்டில் தும்பலபட்டி அருகே கொல்லிமலை வளப்பூர்நாடு ராஜ்குமார் 37, நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE