ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள்: வேளாண் துறை இன்று வழங்குகிறது| Dinamalar

ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள்: வேளாண் துறை இன்று வழங்குகிறது

Added : மே 23, 2022 | |
கம்பம்:ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு, 13 கிராமங்களில் வேளாண் துறை தென்னங்கன்றுகள் வழங்கும் பணிகள் இன்று துவங்குகிறது.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒன்றிரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்களுக்கு வேளாண் துறை மூலம் தென்னங்கன்றுகள், வரப்புப் பயிராக சாகுபடி செய்ய

கம்பம்:ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு, 13 கிராமங்களில் வேளாண் துறை தென்னங்கன்றுகள் வழங்கும் பணிகள் இன்று துவங்குகிறது.
அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒன்றிரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்களுக்கு வேளாண் துறை மூலம் தென்னங்கன்றுகள், வரப்புப் பயிராக சாகுபடி செய்ய தட்டைப் பயறு வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 13 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு கிராமத்தில் 200 குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள், 15 பேர்களுக்கு 5 கிலோ வீதம் தட்டைப் பயறு, மானிய விலையில் விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான்கள் வழங்கப்படுவதாக சின்னமனூர் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார்.
இது தவிர தோட்டக்கலைத்துறை சார்பில் மரக்கன்றுகள், காய்கறி விதைகள், பிளாஸ்டிக் கூடை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை இன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X